ஆன்லைன் மோசடிகள் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதில் முக்கிய பிரபலங்கள் கூட தப்புவதில்லை. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரும் இதில் பாதிக்கப்பட்டுள்ளார். போனி கபூரின் கிரெடிட் கார்டை அவருக்கு தெரியாமலே மர்ம நபர்கள் பயன்படுத்தி பொருள்களை வாங்கி இருக்கின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு கிரெடிட் கார்டு வழங்கிய வங்கியில் இருந்து போனி கபூருக்கு அழைப்பு வந்தது. அதில் கிரெடிட் கார்டு பில் கட்டவில்லை என்று வங்கி ஊழியர் தெரிவித்தார். அதன் பிறகுதான் கிரெடிட் கார்டு சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு இருப்பதே போனி கபூருக்கு தெரிய வந்தது. போனி கபூர் உடனே வங்கியில் இருந்து கிரெடிட் கார்டு பயன்படுத்திய விவரங்களை கேட்டு பெற்ற போது ரூ.3.84 லட்சம் அளவுக்கு போனி கபூர் கிரெடிட் கார்டில் இருந்து செலவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
மொத்தம் 5 பரிவர்த்தனைகளில் இந்த மோசடி நடந்துள்ளது. இது குறித்து போனி கபூர் உதவியாளர் மும்பை அந்தேரி அம்போலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அம்போலி போலீஸ் அதிகாரி கூறுகையில், ``மோசடி பேர்வழிகள் வங்கியில் இருந்து அனுப்புவது போன்று இமெயில் அல்லது மெசேஜ் அனுப்பி கிரெடிட் கார்டு பின் நம்பரை பெற்று இருக்கவேண்டும். அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தியபோது ஸ்கிம்மர் கருவிகளை பயன்படுத்தி பின் நம்பரை திருடி இருக்கவேண்டும்” என்று தெரிவித்தார்.
கிரெடிட் கார்டில் பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்திய ஐபி ஐடியை பயன்படுத்தி விசாரணை நடத்தி வருகின்றனர். சைபர் குற்றங்களை கண்டுபிடிப்பதற்காக மும்பையில் 5 சைபர் போலீஸ் நிலையங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
from Latest News https://ift.tt/T6wkKVi
0 Comments