எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத, உடற்பயிற்சி செய்கிறவரகளுக்கும் ஏன் ஹார்ட் அட்டாக் வருகிறது?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்
இதயநோய்கள் யாருக்கும் வரலாம். அந்த பாதிப்பு சிலருக்கு அதிகமாக இருக்க காரணங்கள் உண்டு. குடும்ப பின்னணியில் யாருக்காவது சிறு வயதிலேயே இதயநோய் பாதிப்புகள் இருந்தால் பிள்ளைகளுக்கும் அந்த பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். புகைப்பழக்கமும், மதுப்பழக்கமும் இருப்பவர்கள் இதயநோய் பாதிப்புக்கான ரிஸ்க் பிரிவில் இருப்பவர்கள்தான்.
கொலஸ்ட்ரால் பாதிப்பு, நீரிழிவு, அதிக ஸ்ட்ரெஸ் உள்ளவர்கள், போதுமான அளவு தூக்கம் இல்லாதவர்கள், உடலுழைப்பே இல்லாதவர்கள், ஆரோக்கியமில்லாத உணவுப்பழக்கம் கொண்டவர்கள் போன்றோருக்கும் ரிஸ்க் அதிகம். இந்த விஷயங்களைத் தவிர்ப்பது இதயநோய் தாக்கும் அபாயத்தைத் தவிர்க்கும். ஆனால் இந்த விஷயங்கள் தவிர்க்கப்படுவதால் ஒரு நபர் இதயநோய் பாதிப்பிலிருந்து 100 சதவிகிதம் பாதுகாப்பாக இருக்கிறார் என்று அர்த்தமில்லை. வயதாக, ஆக இதயநோய் வரும் அபாயம் நிச்சயம் இருக்கும்.
புகைப்பழக்கமும் குடிப்பழக்கமும் நிச்சயம் இதயநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம் இந்தப் பழக்கங்கள் இல்லாதவர்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்றவை இருப்பதே தெரியாமல் இருக்கலாம். அதுவும் இதயநோய் பாதிப்பை நிச்சயம் அதிகரிக்கும்.
புகை, மதுப் பழக்கங்களைத் தவிர்ப்பதுடன், ஸ்ட்ரெஸ்ஸை குறைப்பது, போதுமான அளவு தூங்குவது, உடற்பயிற்சிகள் செய்வது, ஆரோக்கியமாக சாப்பிடுவது - இவை மட்டுமே நாம் செய்ய வேண்டியவை.
from Latest News https://ift.tt/DAsyuZj
0 Comments