விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் ‘தமிழகத்தில் தொலைதூர கல்வியில் பொறியியல் படிப்பதற்கான வழிமுறைகள் என்ன? எத்தனை கல்லூரிகள் பொறியியல் படிப்பைத் தொலைதூரக் கல்வியில் வழங்குகின்றன?’ என்று வாசகர் சிவா கேள்வி எழுப்பியிருந்தார். இதுகுறித்து கல்வியாளர் ராஜராஜனிடம் பேசினோம். அவர் கூறிய பதில் இதோ

“ பொறியியல் படிப்பை தொலைதூர கல்வியில் படிப்பது அறிவுறுத்தக்கதல்ல. பொறியியல் என்றால் தொழிற்படிப்பு. தொழிற்படிப்பை செயல்முறை அல்லாது படிப்பது நல்லது அல்ல. மேலும் பெரும்பான்மை கல்லூரிகளில் பொறியியல் பாடப்பிரிவு கிடைக்கும்பட்சத்தில் தொலைதூர கல்வியில் படிப்பது உகந்தது அல்ல.
AMIE மூலம் பொறியியல் படிப்பை தொலைதூர கல்வியில் படிக்கமுடியும். AMIE என்பது மத்திய, மாநில அரசுகள், AICTE மற்றும் UPSC-யால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியலில் B.Tech அளவிலான ஒரு தேர்வு. இத்தேர்வு B.E மற்றும் B.Tech பாடப்பிரிவுகளுக்கு இணையாக கருதப்படுகிறது. இதை எழுத அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் டிப்ளோமா அல்லது அதற்கு இணையான பொறியியல் துறை படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆனால் இந்த கல்வி பரிந்துரைக்கப்பட மாட்டாது.

இதற்கு மாற்றாக ஓர் சிறந்த வழிமுறை உள்ளது. பொதுவாக ஐ.ஐ.டி-யில் சேர வேண்டுமானால் JEE மெயின் அல்லது JEE அட்வான்ஸ் எழுத வேண்டும். ஆனால் B.E. அல்லது எதாவது ஒரு டிகிரி படிப்பவர்கள் ஆன்லைனில் Data Science and Programming என்ற பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க முடியும். இந்த பாடப்பிரிவை படிக்க ஐ.ஐ.டி-யில் ஒரு பவுண்டேசன் பாடப்பிரிவுக்கு விண்ணபிக்க வேண்டும். இந்த பாடப்பிரிவு படிப்பை முடித்த பிறகு BSc in Programming and Data Science-ல் சேரலாம். இந்த பாடப்பிரிவில் படிக்க பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளோருக்கு சிறப்பு சலுகை தரப்படும். 11-ம் வகுப்பு படிக்கும்போதே பவுண்டேசன் பாடப்பிரிவு படிப்பை முடித்துவிட்டால் பள்ளிபடிப்பு முடித்தபிறகு B.Sc in Programming and Data Science தேர்ந்தெடுத்துக் கொள்ளமுடியும். மேலும் அதே நேரத்தில் வேறொரு டிகிரியும் படிக்கலாம்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை இங்கே கிளிக் செய்து பதிவு செய்யுங்க!
மேலும் வெளிநாட்டு பல்கலைகழகங்கள் வழங்கும் ஆன்லைன் பாடப்பிரிவுகளையும் இணையம் வாயிலாக படிக்கலாம். ஆனால் பொறியியல் படிப்பைக் கல்லூரியில் சேர்ந்து படிப்பதுதான் சிறந்தது.
இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!
from Latest News https://ift.tt/hdNuqbF
0 Comments