உத்தரப்பிரதேசத்தில் ராம்பூர், அசம்கர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், இரண்டு தொகுதிகளிலுமே ஆளும் பாஜக-வே வெற்றிபெற்றதையடுத்து சமாஜ்வாதி கட்சியை ஒவைசி கடுமையாகச் சாடியுள்ளார்.
இதுகுறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய ஒவைசி, ``அகிலேஷ் யாதவ், மக்களைக் கூட சந்திக்காத அளவுக்கு கர்வம் கொண்டவர். இந்த இடைத்தேர்தல் முடிவுகள் சமாஜ்வாடியால் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க முடியாது என்பதையே காட்டுகிறது. அவர்களுக்கு அத்தகைய அறிவுக்கூர்மையும் இல்லை. சிறுபான்மை சமூகங்கள் இதுபோன்ற திறமையற்ற கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது.
பா.ஜ.க-வின் இந்த வெற்றிக்கு யார் காரணம்?, இனி அவர்கள் யாரை பி-டீம், சி-டீம் என்று கூறுவார்கள். எனவே இஸ்லாமியர்கள் தங்களுக்கென்று ஒரு அரசியல் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளுமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்" எனக் கூறினார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், அசம்கான் வெற்றிபெற்றதையடுத்து, இவர்கள் இருவரும் தாங்கள் வகித்த வந்த எம்.பி பதவியை ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து ராம்பூர், அசம்கர் ஆகிய இந்த இரண்டு தொகுதிகளும் இடைத்தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
from Latest News https://ift.tt/3K1nBhq
0 Comments