https://gumlet.vikatan.com/vikatan/2022-05/39d55215-7c78-496d-99e2-e3c482b1ef04/6270fb25be53f.jpegபொருளாதார நெருக்கடி: `பள்ளிகள் மூடல்; எரிபொருளை சேமிக்க வீட்டிலிருந்து வேலை பாருங்க' - இலங்கை அரசு

இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியில், மக்கள் போராட்டத்தின் உச்சகட்ட விளைவாக மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். ஆனாலும் இலங்கையில் இன்னும் பொருளாதார நெருக்கடி சரியான பாடில்லை.

இந்த நிலையில், ``இலங்கை முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்கள் வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் வழங்கும் முறை தொடங்கும். 9,000 டன் டீசல் மற்றும் 6,000 டன் பெட்ரோல் கையிருப்பில் உள்ளது" என்று இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை

வர்த்தகத் தலைநகரான கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வார காலத்திற்கு பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு அரசாங்கம் வலியுறுத்தியிருக்கிறது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, மூன்று சக்கர வாகனங்கள் பெட்ரோல் வாங்க வரிசையில் காத்திருக்கின்றன. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

இது தொடர்பாக ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநர் ஷெல்டன் என்பவர் கூறியதாவது, ``நான்கு நாள்களாக வரிசையில் நிற்கிறேன். நான் சரியாக தூங்கவில்லை, சாப்பிடவில்லை. எங்களால் சம்பாதிக்க முடியாது, எங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்கவும் முடியாது'' என்றார் கலக்கத்துடன்.



from Latest News https://ift.tt/aqBjX9n

Post a Comment

0 Comments