https://gumlet.vikatan.com/vikatan/2022-06/09ac33b9-4575-44d8-acc0-4ecf2ecf1c89/492294108.jpgஜானி டெப்பிடம் மன்னிப்பு கேட்டதா டிஸ்னி? மீண்டும் ஜாக் ஸ்பேரோவாக ரூ.2,500 கோடிக்கு ஒப்பந்தம்?

ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட் இடையிலான வழக்கின் தீர்ப்பு ஜானிக்கு சாதகமாக வந்தது. அதன் தொடர்ச்சியாக 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' திரைப்படத்தில் இருந்து ஜானி டெப்பை முன்பு நீக்கியதற்கு Disney நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தனர்.

ஆம்பர் ஹெர்ட் 2018-ல் பத்திரிகை ஒன்றில் ஜானி குறித்து எழுதிய பிறகு, ஜானி நடிப்பதாக இருந்த 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தின் ஆறாவது பாகத்தில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ச்சியாக 'பேன்டஸ்டிக் பீஸ்ட்ஸ் 3' திரைப்படத்தில் இருந்தும் ஜானி நீக்கப்பட்டார். படங்கள் கொஞ்ச கொஞ்சமாக கையைவிட்டுப் போக, ஆம்பரால்தான் இந்த நிலை என நீதிமன்றத்தில் வாதாடவும் செய்தது ஜானி தரப்பு. இப்போது தீர்ப்புக்கு பிறகு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

ஆம்பர் ஹெர்ட் - ஜானி டெப்

ஜானி டெப் மீண்டும் கேப்டன் ஜாக் ஸ்பரோவாக நடிப்பாரா என்பதே அவரது ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்தது. டிஸ்னி நிறுவனம் ஜானி டெப்பிடம் மன்னிப்பு கோரி கடிதம் எழுதியதோடு அடுத்த பாகத்தில் நடிக்கக் கிட்டத்தட்ட 301 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 2,535 கோடி) அளவுக்கு ஒப்பந்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜானி அதற்கு என்ன பதிலளித்தார் என்பது பற்றிய தகவல்கள் இல்லை. இந்தச் செய்தியை முதன் முதலில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு ஆன்லைன் ஊடகம் வெளியிட்டுள்ளது.

ஜானி - ஆம்பர் ஹெர்ட் வழக்கு நடந்த போது, "இனி 300 மில்லியன் டாலர்கள் கொடுத்தால்கூட டிஸ்னியின் 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தில் நடிக்க மாட்டேன்" என்று ஜானி தெரிவித்திருந்தார்.

பாரீஸில் இருக்கும் டிஸ்னி லேண்டின் லைட் ஷோவில் 'பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்' படத்தின் படங்களை டிஸ்னி நான்கு வருடங்களுக்குப் பிறகு கடந்த வாரம் பயன்படுத்தியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/gvjVCtb

Post a Comment

0 Comments