இந்திய ராணுவத்தில் புதிய முறையில் ஆள்சேர்க்கும் விதமாக, `அக்னிபத்' எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுக்கால ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களில், 25 சதவிகிதம் பேர் மட்டுமே நேரடியாக இந்திய ராணுவத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
அதன் காரணமாக புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களும், அரசியல் கட்சிகளிடமிருந்து எதிர்ப்புகளும் எழுகின்றன. இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``அக்னிபத் ஒரு மாற்றும் திட்டம். இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் அதை மதிப்பாய்வு செய்வோம், இந்த திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது சவால்கள் இருந்தால் , அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி செய்வோம். இந்தத் திட்டம் ஆயுதப் படைகளின் ஆள்சேர்ப்புச் செயல்பாட்டில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரும். இந்தத் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 46,000 வீரர்களை பணியில் அமர்த்துவதற்கு ஆயுதப் படைகள் திட்டமிட்டுள்ளன. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப் போகிறது'' என்றார்.
from Latest News https://ift.tt/JWNblCL
0 Comments