https://ifttt.com/images/no_image_card.png``திரெளபதி ஜனாதிபதி என்றால்..." இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் சர்ச்சை ட்வீட்; கிளம்பிய எதிர்ப்பு!

பாஜக சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது.

இந்நிலையில் தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மா பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு டிவிட் பதிவிட்டுள்ளார் அதில் திரெளபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்? குறிப்பாக கவுரவர்கள் யார் என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தெலங்கானா பாஜக தலைவர்களில் ஒருவரான நாராயண ரெட்டி தயாரிப்பாளர் ராம்கோபால் வர்மாமீது காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

இது தொடர்பாக நாராயண ரெட்டி அளித்த பேட்டியில், "எஸ்இ மற்றும் எஸ்டி இன மக்களை ராம் கோபால் வர்மா அவமதித்துவிட்டார். அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்துள்ளனர். இது போன்ற ட்வீட் அல்லது அறிக்கையை இனிமேல் அவர் வெளியிடமாட்டார் என நம்புவதாகவும் நாராயண ரெட்டி தெரிவித்தார். தெலங்கானாவை சேர்ந்த மற்றொரு பாஜக எம்.எல்.ஏ.வும் இது குறித்து அளித்துள்ள பேட்டியில், "ராம் கோபால் வர்மா குடிபோதையில் இதை பதிவிட்டிருப்பார் என்றும், இதுபோன்ற சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பது அவரின் வாடிக்கை" எனக் கூறியிருக்கிறார். . இதற்கிடையே இது சர்ச்சையானதால் அதற்கு ராம்கோபால் வர்மா விளக்கம் தெரிவித்து மற்றொரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "மகாபாரதத்தில் திரெளபதி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அந்த பெயர் மிகவும் அபூர்வமானது என்பதால் அதனோடு தொடர்புடைய கதாபாத்திரங்களை நினைவுபடுத்திப் பார்த்தேன். யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் அதனை பதிவிடவில்லை" என்று தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.



from Latest News https://ift.tt/caxy2SG

Post a Comment

0 Comments