சமீபத்தில் குதிரை பந்தயம், சூதாட்டம், ஆன்லைன் விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எந்த துறைகளில் எல்லாம் மக்களின் ஈடுபாடு அதிகம் உள்ளதோ, அந்த துறைகளில் எல்லாம் ஜி.எஸ்.டி என்ற ஆயுதத்தை உள்ளே கொண்டு வந்து வரி வசூலித்து வருகிறது, மத்திய அரசு.
இந்நிலையில், ஆன்லைன் விளையாட்டுகள், கேளிக்கை கூடம் (கேசினோ) மற்றும் குதிரை பந்தயங்களுக்கான ஜி.எஸ்.டி வரியானது இதுவரையில் 18 சதவிகிதமாக இருந்த நிலையில், அதை 28 சதவிகிதமாக உயர்த்த அரசு ஏற்கெனவே திட்டமிட்டு இருந்தது. அதற்கான முயற்சிகளில் அரசு தற்போது தீவிரம் காட்டி வருகிறது.
ஒருவேளை அரசு ஆன்லைன் விளையாட்டுகள், கேளிக்கை கூடம் (கேசினோ) மற்றும் குதிரை பந்தயங்களுக்கான ஜி.எஸ்.டி வரியை 18 சதவிகிதத்திலிருந்து 28 சதவிகிதமாக உயர்த்தும் பட்சத்தில், ``கேசினோக்களில் வாங்கும் காயின் மற்றும் சிப்ஸ்களுக்கு 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கும்பட்சத்தில், பந்தயம் வைப்பதற்காகக் கொண்டு வந்த பணத்திலிருந்து பெரும்பகுதியை அதற்காக மட்டுமே விளையாட வருபவர்கள் செலவு செய்ய வேண்டி இருக்கும். இது சூதாட்டத் துறையை கடுமையாக பாதிக்கும்” என்பது கோவாவின் கருத்தாக இருக்கிறது. ஏனெனில், கோவா போன்ற இடங்களில் கேசினோக்கள், சூதாட்ட விடுதிகள் மிகவும் பிரபலம்.
சூதாட்டங்களுக்கு ஜி.எஸ்.டி வரி 28% என்று அமலாகும்பட்சத்தில், முதலில் பாதிப்புக்குள்ளாவது கோவாதான். இதனால்தான், அரசின் வரி உயர்வுக்கு முன்பே கோவா எதிர்ப்பு தெரிவித்தது. கோவாவின் இந்தக் கோரிக்கையையும் கருத்தில் கொண்டு குழுவின் பரிந்துரையை பரிசீலனை செய்ய உள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி சட்டக் குழுவின் கண்காணிப்பில் ஜி.எஸ்.டி குழுவின் இறுதி பரிந்துரை முன்வைக்கப்படும்.
from Latest News https://ift.tt/U2AheS1
0 Comments