https://gumlet.vikatan.com/vikatan/2021-02/1daef359-4109-47e9-a7c0-9baa71549af3/200820_joe_biden_speech_dnc_ac_1142p_6590c55944736bf3a15ec3da755f8e8f.jpg``நெருப்பை வைத்து விளையாடினால் சூடுதான் படும்” - தைவான் விவகாரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்

அமெரிக்க, சீனா இடையில் இருக்கும் அரசியல் பிரச்னைகள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஜி ஜின்பிங் -ம் தொலைபேசி மூலம் உரையாடினர். கடந்த வியாழனன்று நடைபெற்ற இந்த உரையாடல் இரண்டு மணி நேரங்களுக்கு மேல் நீடித்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஜோ பைடன் பிரதமர் ஆனபின் சீன நாட்டின் அதிபரோடு ஐந்தாவது முறையாக தொலைபேசி மூலம் உரையாடினார். இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்தும் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜோ பைடன் | Joe Biden

தைவானால் நிலவி வரும் பிரச்னைகள் குறித்தும் இந்த உரையாடலில் பேசியுள்ளனர். தைவான் தன்னைத் தானே சுயமாக ஆட்சி செய்யும் நாடாக கூறி வருகிறது. தைவானுக்கு மறைமுகமாக அமெரிக்கா பல வழிகளில் உதவி செய்து வருகிறது. ஆனால் சீன அரசோ தைவான் சீனநாட்டை சேர்ந்த ஒரு பகுதியே ஆகும் என கூறி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தை சேர்ந்த நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொள்வதாக திட்டமிடப்பட்டது.

இந்த பயணதிட்டமே தற்போதைய சீனாவின் அதிருப்திக்கு காரணமாகத் தெரிகிறது. இதுபோன்ற ஒரு பயணம் அச்சுறுத்தலாகவே கருதப்படும் என சீன அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த பயணம் உறுதி செய்யப்பட்டால் அதற்கேற்ற விளைவுகளை அமெரிக்கா சந்திக்க வேண்டி வரும் என சீன அரசு கடந்த புதன்கிழமை தெரிவித்தது.

ஜி ஜின்பிங்

தைவான் விவகாரம் பற்றி பைடனிடம் பேசிய சீன அதிபர் ஜின்பிங், "நெருப்பை வைத்து விளையாடுபவர்கள் கையில் கண்டிப்பாக சூடு ஏற்படும். இதை அமெரிக்க தரப்பு புரிந்து கொள்ளும் என நினைக்கிறேன். தைவான் விஷயத்தில் சீன அரசு மற்றும் மக்களின் நிலைப்பாடு உறுதியாக உள்ளது. சீனாவின் 1.4 பில்லியன் மக்கள் சீனாவின் தேசிய இறையாண்மை மற்றும் ஒற்றுமையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளனர்" எனக் கூறினார்.



from Latest News https://ift.tt/yAE2uGk

Post a Comment

0 Comments