https://gumlet.vikatan.com/vikatan/2022-07/ae06d473-daec-415b-858b-fd6f4e9f5e7f/62e20138d58ca.webp``அமெரிக்காவுடனான எத்தகைய ராணுவ மோதலுக்கும் வடகொரியா தயார்" - அதிபர் கிம் ஜாங் உன் ஆவேசம்

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதப்போரை தடுக்க வடகொரியா தயாராக இருப்பதாகவும், அதேசமயம் அமெரிக்காவுடனான எந்தவிதமான ராணுவ மோதலுக்கும் நாடு தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். வடகொரியாவில், கொரியப் போர் நிறுத்தத்தின் நினைவு தினமான நேற்று (ஜூலை 27) அதன் 69-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

அமெரிக்கா - வடகொரியா

அதில் கலந்துகொண்ட அதிபர் கிம் ஜாங் உன், வடகொரியா மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகளைத் தாக்கி பேசியபோது, ``போருக்குப் பிறகான 70 ஆண்டுகளுக்குப் பிறகும் வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்கா, ஆபத்தான சட்டவிரோத விரோதச் செயல்களைத் தொடர்கிறது. மேலும், நாட்டை மூர்க்கத்தனமாகக் காட்டி, அமெரிக்கா அதன் நடத்தையை நியாயப்படுத்த முயல்கிறது. அமெரிக்காவின் இந்த இரட்டைச் செயல், நமது ஆயுதப் படைகளின் அனைத்து வழக்கமான நடவடிக்கைகளையும் ஆத்திரமூட்டல் என்று தவறாக வழிநடத்துகிறது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்

இதனால் இருதரப்பு உறவுகளைத் திரும்பப் பெறுவதென்பது கடினமான ஒன்று. மேலும், இது மோதலின் நிலைக்குத் தான் தள்ளுகிறது. அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவுடனான எந்தவொரு ராணுவ மோதலுக்கும் வடகொரியா முழுமையாகத் தயாராக உள்ளது என்பதையும் நான் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்துகிறேன்" என்று கூறினார்.

தென் கொரியாவும், அமெரிக்காவும் தங்களுடைய முதல் அணு ஆயுத சோதனையை நடத்துவதற்கான வேலைகளை முடிவித்துவிட்டதாக கூறியதையடுத்து, கிம் ஜாங் உன்-னிடம் இருந்து இத்தகைய கருத்து வெளிவந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/gxycXUR

Post a Comment

0 Comments