https://gumlet.vikatan.com/vikatan/2022-06/3316b18f-b30a-41cb-9f43-30d6e2c7dc9d/bank.jpgமகாராஷ்டிரா: ரூ.34,000 கோடி வங்கி மோசடி... பிரபல தொழிலதிபர் வீட்டிலிருந்து ஹெலிகாப்டர் பறிமுதல்!

மகாராஷ்டிராவில், ரூ.34,000 கோடி வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள், பிரபல கட்டட தொழிலதிபர் வீட்டிலிருந்து ஹெலிகாப்டரை நேற்று பறிமுதல் செய்திருக்கிறன்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஹெலிகாப்டர், அகஸ்டா வெஸ்ட்லேண்டில் தயாரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

முன்னதாக யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான 17 வங்கிகளின் கூட்டமைப்பை, ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்-ன்(டி.ஹெச்.எஃப்.எல்) போலியான கணக்குப் புத்தகங்களைப் பயன்படுத்தி, ரூ.34,615 கோடி வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

Bank (Representational Image)

கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனம், அதன் முன்னாள் சி.எம்.டி கபில் வாத்வான், இயக்குநர் தீபக் வாத்வான் மற்றும் பலர்மீது சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்தது. மேலும் இவர்கள், போலியான (இல்லாத) நிறுவனங்களுக்கு சில்லறைக் கடன்களாகப் பணத்தை விநியோகிப்பதன் மூலம் டி.ஹெச்.எஃப்.எல்-ல் பொது நிதியைப் பறிக்க, ஷெல் நிறுவனங்கள் மற்றும் 'பாந்த்ரா புக்ஸ்' எனப்படும் இணை கணக்கியல் அமைப்பை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர்

அதைத் தொடர்ந்து, டி.ஹெச்.எஃப்.எல் ஊழல் மூலம் கிடைத்த சொத்துகளை கண்டுபிடிக்க கடந்த சில தினங்களாகவே பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துவந்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக புனேவிலுள்ள பிரபல கட்டட தொழிலதிபரின் வீட்டில் நேற்று சோதனை நடத்திய சி.பி.ஐ அதிகாரிகள், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒன்றை பறிமுதல் செய்தனர்.



from Latest News https://ift.tt/ChEXeQ0

Post a Comment

0 Comments