https://gumlet.vikatan.com/vikatan/2022-07/e810fd1c-6140-4a10-8657-d8913c997c2c/8m40kj58_draupadi_murmu_twitter_650_650x400_21_June_22.webp``பாஜக என்னை பயங்கரவாதி என்று UAPA சட்டத்தின் கீழ் கைது செய்ய காத்திருக்கிறேன்" - ஆதிர் ரஞ்சன்

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, `ராஷ்டிரபத்னி' என காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி கூறிய சம்பவம் நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ், பா.ஜ.க-விடையே பெரும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதினார். அதில்,"நான் பேசியது தெரியாமல் வாய்தவறி வந்த வார்த்தை. அதற்காக வருந்துகிறேன். மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

திரௌபதி முர்மு

ஆனாலும், தொடர்ந்து பா.ஜ.க தலைவர்கள் அவரை விமர்சித்துவருகின்றனர். மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களை சந்தித்த போது, "அது வாய்தவறி வந்த வார்த்தையல்ல. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெளிவாக இரண்டாவது முறை 'ராஷ்டிரபத்னி' என்று தன்னைத் திருத்திக் கொள்கிறார். இது போன்ற விஷயங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர் தேசவிரோதி, பழங்குடியினருக்கு எதிரானவர்.மேலும் குடியரசுத் தலைவரிடம் சென்று மன்னிப்பு கேட்டுவிட்டாரே என்று இந்த விவகாரத்தை எப்படி சிறுமைப்படுத்துவது?, இது அவ்வளவு எளிதானதா?, கண்டிக்கத்தக்கது" எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ

பா.ஜ.க-வின் இந்த விமர்சனத்துக்கு பதிலளிக்கும் விதமாக, காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, "பா.ஜ.க என்னை பயங்கரவாதி என்று UAPA சட்டத்தின் கீழ் கைது செய்ய காத்திருக்கிறேன். நான் யாருக்கும் பயப்படவில்லை. அவர்கள் பழங்குடியினரின் பாதுகாவலர்களாக மாற விரும்புகிறார்கள், ஆனால் பழங்குடி மக்களின் கொலைகள் எப்படி நடக்கின்றன என்பதை மறைக்க விரும்புகிறார்கள். சோனியா காந்தியின் கீழ் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் மாற்றப்படுகின்றன, அவர்கள் பழங்குடிகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள்" எனக் கூறியுள்ளார்.



from Latest News https://ift.tt/aZpYxgb

Post a Comment

0 Comments