https://gumlet.vikatan.com/vikatan/2019-05/cb6d330c-eead-4d03-a647-3f20151c2b20/156672_thumb.jpgசேலம்: `இங்க இருந்த டவரை காணோம்’ - அதிர்ந்த அதிகாரிகள்; எடைக்குப் போட்ட கும்பல்

சேலம், வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் அங்கு வந்த கும்பல் ஒன்று, காவலாளியிடம் சில ஆவணங்களை காண்பித்து செல்போன் டவர் செயலற்று போனதாக தெரிவித்துள்ளனர். பின்னர் செல்போன் டவரை கிரேன் கொண்டு கழற்றி திருடிச் சென்றுள்ளனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் பராமரிப்பு பணிக்காக செல்போன் டவர் அமைந்திருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தபோது, இடம் வெறிச்சோடி கிடந்துள்ளது. இதனைக் கண்ட பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து, நிறுவனத்தின் மேலாளர் தமிழரசனிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பின் தமிழரசன் வாழப்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த நாகமுத்து, தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியை சேர்ந்த சண்முகம், சேலம் மாவட்டம் வாழப்பாடி காமராஜர் நகரை சேர்ந்த ராகேஷ் சர்மா ஆகியோரை கைது செய்தனர்.

கைது

அவர்களிடமிருந்து 6.46 லட்சம் ரொக்கம் 9 டன் டவர் இரும்பு, ஒரு ஜெனரேட்டர் ஆகியவற்றை விருதுநகரில் பறிமுதல் செய்த போலீஸார் மேலும் இதில் சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகளை தேடி வருகின்றனர்.

பிடிபட்ட நபர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், இதுபோன்று செல்போன் டவர்களை நோட்டமிட்டு திருடி வந்துள்ளதும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே எடை மேடு பகுதியில் தனியார் வே-பிரிட்ஜில் எடை போட்டு அந்த எடை மேடையின் உரிமையாளரிடமே பொருள்களை விற்றதும் தெரியவந்தது. மீதம் இருந்த இரும்பு தளவாடங்களை கோவில்பட்டியை சேர்ந்த வியாபாரியிடம் விற்றதாக விசாரணையில் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



from Latest News https://ift.tt/fC2MlNB

Post a Comment

0 Comments