https://gumlet.vikatan.com/vikatan/2020-04/ebb16abb-04c6-40ca-be5f-d67b4a4cab43/01.jpgதிருவண்ணாமலை: எல்.கே.ஜி சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் வன்கொடுமை - அரசு பள்ளி ஆசிரியர் கைது!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே உள்ள கெங்கை சூடாமணி எனும் பகுதியில் இயங்கி வருகிறது ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியின் தாளாளர் பிரபாவதியின் கணவர் காமராஜ், உலகம்பட்டு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர், இவருடைய மனைவி நடத்திவரும் தனியார் பள்ளிக்கு அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். கடந்த 15 தினங்களுக்கு முன்பாக வழக்கம்போல் அந்த தனியார் பள்ளிக்கு வந்த காமராஜ், அப்பள்ளியில் எல்.கே.ஜி பயின்று வரும் 4 வயது சிறுமிக்கு, சாக்லேட் கொடுத்து ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

திருவண்ணாமலை எஸ்.பி ஆபீஸ்

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்குச் சென்றபோது வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறி அழுதாராம். அதன்படி அருகிலுள்ள சேத்துப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்ற பெற்றோர், சிறுமிக்கு வயிற்று வலிக்கான சிகிச்சை பெற்று திரும்பியதாகச் சொல்லப்படுகிறது. பின் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற சிறுமியை அழைத்து சாக்லேட் கொடுத்து ஏமாற்றி காமராஜ், சிறுமியை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மீண்டும் பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோர்களிடத்தில் வயிறு வலிப்பதாக கூறி அழுதுள்ளார். மேலும், சிறுமியின் ஆடையில் குருதிக்கரை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்ற பெற்றோர், அச்சிறுமியை வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, பரிசோதித்த மருத்துவர்கள் பெற்றோர்களிடத்தில் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்ற ஆய்வாளர் கவிதா, திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் செல்வியுடன் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்குச் சென்று சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளார். பள்ளியில் இருந்த குழு புகைப்படம் ஒன்றை சிறுமியிடம் காண்பித்து, காமராஜை உறுதிசெய்த மகளிர் போலீஸார்... வழக்கு பதிந்து காமராஜரை தேடியுள்ளனர்.

வேலூர் சி.எம்.சி மருத்துவமனை

விசாரணையில் காமராஜ் கோயிலுக்குச் சென்றிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், எட்டயபுரம் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காமராஜ் கோயிலில் இருந்து வீட்டுக்கு திரும்பி வரும் வழியிலேயே எட்டயபுரம் போலீஸாரால் செய்யப்பட்டுள்ளார். மேலும், அரசுப் பள்ளி ஆசிரியர் காமராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

இந்தச் கொடும் சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருக்கும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், "சிறுமி பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அவர்களை மனித ஜென்மமாகவே கருத முடியாது. குழந்தையை சீரழித்த ஆசிரியர் காமராஜ் கைதுசெய்யப்பட்டதுடன், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், இது போதுமானதல்ல. அவர் உடனடியாக வெளியில் வர முடியாதபடி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட வேண்டும். போக்சோ வழக்கில் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

தனியார் பள்ளி, காமராஜ்

பள்ளியின் தாளாளர் ஒத்துழைப்பு இல்லாமல் இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்க முடியாது. கணவனின் மிருகத்தனமான செயலுக்கு உடந்தையாக இருந்த காமராஜின் மனைவியான பள்ளித் தாளாளரையும் வழக்கில் சேர்க்க வேண்டும். அவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். இதனால், ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்புமணி

மழலையர் கல்வி பயிலும் சிறுமி ஒருவர், தான் பயிலும் பள்ளியிலேயே அரசுப் பள்ளி ஆசிரியரால் சாக்லேட் கொடுத்து ஏமாற்றப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது



from Latest News https://ift.tt/8GWPy9S

Post a Comment

0 Comments