உத்தரப்பிரதேச மாநிலம், ஹப்பூர் மாவட்டத்தின் பாபுகர் பகுதியில் வசித்து வருபவர் முகமது ஃபரியாத். இவருக்கு ஆறு குழந்தைகள். தனது இரண்டாவது மகளான ரேஷ்மா என்பவர் சரியான நேரத்தில் உணவு வழங்காததால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் மோதலாக மாறி இருக்கிறது. கோபத்தில் புல் வெட்ட பயன்படும் கூர்மையான கத்தியை எடுத்து தனது மகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ரேஷ்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.ஒரு வாரத்தில், அதாவது செப்டம்பர் 4-ம் தேதி ரேஷ்மாவுக்கு திருமணம் நடைபெற இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அந்த பெண்ணின் தந்தையை கைது செய்தனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகேஷ் சந்திரா கூறுகையில், "பாபுகர் காவல் நிலையத்தில் ஐபிசி 302 (கொலை) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பெண்ணின் சடலமும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்றார்.
from Latest News https://ift.tt/2SA18xV
0 Comments