நம்ம ஊரு, நம்ம பக்கத்துக்கு ஊருனு, தேர்தல் கிட்ட நெருங்குறப்போ அந்த தொகுதிக்கே மொத தடவையா அரசியல்வாதிகளை பார்த்திருப்போம். அப்படி அந்த சமயத்துல ஓட்டுகேட்டு வர அரசியல்வாதிங்க, டீ கடைல நின்னு டீ ஆத்துறது, துணி துவைக்கிறது, தண்ணி குடம் தூக்குறது முக்கியமா ஓட்டுக்காக மக்களோட கால்ல விழுறதுனு நெறைய அலப்பறைகள் நடக்கும். அத கண்கூடாக நாமும் பாத்து ரசிச்சிருப்போம். எல்லா அரசியல்வாதியும் அப்டி இல்லனு வச்சிக்கிட்டாலும், நெறைய அரசியல்வாதிங்க அப்டி தான் இருக்காங்க. சரி அரசியல்வாதிங்க தான் அப்டி இருக்காங்கன்னு பாத்தா, ராஜஸ்தான்ல காலேஜ் பசங்க பலர், மாணவர் சங்க தேர்தல்ல ஜெயிக்கணும்னு சக மாணவிகள் கால்ல ஓட்டுகேட்டு விழுந்திருக்காங்க.
அப்படி பசங்க ஓட்டுகேட்டு, மாணவிகள் கால்ல விழுற அந்த வீடியோ ட்விட்டரில் பெரும் வைரலாகிட்டு வருது. அந்த வீடியோல, பசங்க மாணவிகள்ட கையெடுத்து கும்பிட்றதையும், கால்ல விழுறதையும், மாணவிங்க ஒதுங்கி ஒதுங்கி போறதையும் பாத்து, நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்கள்ல தங்களோட கருதுக்கள்ல மூலமா கலாய்ச்சிட்டுருக்காங்க. அதுலயும் நெட்டிசன் ஒருத்தர், ``இன்னைக்கு இந்த மாணவர் தலைவர்கள் வாக்காளர்களோட காலடியில இருக்கிறாங்க, நாளைக்கு இந்த வாக்காளர்கள், தலைவர்கள்ட யாசகம் செய்வாங்க-னு" தன்னோட கருத்த பதிவிட்ருக்காரு. பெரும் வைரலாகிட்டு வரும் இந்த வீடியோ, 1 லட்சத்துக்கும் மேல பார்வையாளர்கள கடந்து இன்னும் வைரலாகிட்டு இருக்கு.
from Latest News https://ift.tt/dJFrmwW
0 Comments