https://ifttt.com/images/no_image_card.pngம.பி: வணிக வளாகத்தில் தொழுகை நடத்த எதிர்ப்பு; அனுமான் சாலிசா பாடிய பஜ்ரங் தள் அமைப்பினர்- பரபரப்பு

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த வணிக வளாகத்துக்குள் சிலர் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கேள்விபட்ட பஜ்ரங் தள் அமைப்பினர் சிலர் வணிக வளாகத்துக்குள் வந்து, தொழுகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தொழுகை நடப்பதற்கு எதற்கு தெரிவித்து அனுமான் சாலிசாவை ஸ்தாபனத்தில் ஓதுவோம் என்று மால் நிர்வாகத்தினரிடம் வாக்குவாதம் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்தநிலையில், இது தொடர்பாக போராட்டக்காரர்களுக்கு தலைமை தாங்கிய அபிஜீத் சிங் ராஜ்புத் கூறுகையில், “வணிக வளாகத்தின் உள்ள ஒரு தளத்தில் சிலர் தொழுகை நடத்துவதாக கடந்த ஒரு மாதமாக எங்களுக்கு தகவல் வருகிறது. நாங்கள் இன்று அங்கு வந்து தொழுகை நடத்தும் 10 முதல் 12 பேரை பிடித்தோம்’’ என்றார்.

மேலும் இது தொடர்பாக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, ``போராட்டம் குறித்த தகவல் கிடைத்தும் சம்பவ இடத்திற்கு ஒரு போலீஸ் குழு அனுப்பப்பட்டது. ஆனால் எந்தவித அசம்பாவிதம் ஏற்படவில்லை. போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றபோது பஜ்ரங் தள உறுப்பினர்கள் வணிகவளாகத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை’’ என்றார்.



from Latest News https://ift.tt/HYrIpAw

Post a Comment

0 Comments