சென்னைக்கு தற்போது வயது 382. ஆகஸ்ட் 22-ம் தேதி கொண்டாடப்படும், இத்தினத்திற்கு பெயர் `மெட்ராஸ் டே'. சென்னை என்று பேரெழும் முன் சென்னைக்கு பெயர் மதராசபட்டினம் என்று ஊரறியும். சென்னை மக்களுக்கு இத்தினம் உணர்ச்சி பூர்வமான நாளாக கொண்டாட பட்டு வருகிறது. `வந்தாரை வாழ வைக்கும் சென்னை' என பல மக்களும் சென்னையை இத்தினத்தில் பூரிப்புடன் கொண்டாடினர்.
அந்த வகையில், `முருகப்பா குரூப் ஆப் கம்பெனிஸ்' வழங்கும் `தி மெட்ராஸ் குவிஸ்' என்ற நிகழ்ச்சி 2004-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கின்றனர் தி மெட்ராஸ் குவிஸ் குழுவினர். 2022ம் ஆண்டினுடைய அதன் நிகழ்ச்சி மெட்ராஸ் வாரமான ஆகஸ்ட் 28ல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கு பெறுவதர்ந்து வயது வரம்பு என்று ஒன்றும் கிடையாது. பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் கலந்துகொண்டு சென்னையைப் பற்றிய தங்களின் அறிவுத் திறனை வெளிப்படுத்தினர். இந்த நிகழச்சியில் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த குவிஸ் நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் சென்னை குறித்தான கேள்விகள் மட்டுமே. மெரினா கடற்கரை, தி நகர், சௌகார் பேட்டை வீதி இவற்றைத் தாண்டியும் சென்னை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கின்றன என்பதை நமக்கு அறிவுறுத்தும் விதமாக கேள்விகள் இருந்தன. நிகழ்ச்சியை பொறுமையோடும், அனைவரையும் உற்சாகப்படுத்தும் விதமாகவும் தொகுத்து வழங்கினார் டாக்டர் சுமந்த் சி ராமன். நிகழ்ச்சியில் வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. வருடத்திற்கு ஒருமுறை சென்னை குறித்து நமக்குத் தெரிந்ததை நினைவுபடுத்தவும், தெரியாதவற்றைத் தெரிந்துகொள்ளவும் வழிவகை செய்யும் விதமாக அமைந்தது மெட்ராஸ் குவிஸ் நிகழ்ச்சி.
-ரக்தி சம்பர்தா
from Latest News https://ift.tt/IVh4RyH
0 Comments