https://gumlet.vikatan.com/vikatan/2022-09/53ac0695-7e44-4b45-8227-dfea9a60c21a/63104704a30ac.jpgஓய்வுக் காலத்தை மகிழ்ச்சியாய் கழிக்க எவ்வளவு பணம் தேவை? வழிகாட்டும் நாணயம் விகடன் நிகழ்ச்சி!

ஓய்வுக்காலம் என்பது எல்லோருக்குமே மிக முக்கியமான காலம். 60 வயது வரை ஓடி ஓடி உழைத்து களைத்து போன நிலையில் கொஞ்சமேனும் இந்த வாழ்க்கையை ரசித்து வாழலாம் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும். பிடித்த இடங்களுக்கு சுற்றுலா செல்வது, பிடித்தமான விஷயங்களைச் செய்வது என எல்லோருக்குமே ஓய்வுக்காலத்தை கழிப்பதற்கு ஒரு திட்டம் இருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட்

ஆனால் அதற்கு கணிசமான வருமானம் என்பது கட்டாயம் தேவை. எல்லோருக்கும் கடைசி வரை வருமானம் வரும் என்று சொல்ல முடியாது. எனவே ஓய்வுக்காலத்திலும் பண நெருக்கடி இல்லாமல் வாழ்வதற்குத்தான் ஓய்வுக்கால நிதியைத் தயார் செய்துகொள்வது அவசியம் என நிதி ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

அதேசமயம் எப்படி ஓய்வுக்காலத்துக்கான நிதியைத் தயார் செய்வது, எதில் சேமித்தால் எவ்வளவு கிடைக்கும். ஓய்வுக்காலத்தில் நம்முடைய நிதி தேவை எப்படி இருக்கும் என்பதையெல்லாம் பொருத்துதான் நம்முடைய முதலீட்டையும் திட்டமிட வேண்டும்.

அந்த வகையில் ஓய்வுக்காலத்துக்கான நிதியை சேர்ப்பதற்கு மியூச்சுவல் ஃபண்ட் ஒரு சிறந்த வழி. பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திரங்கள் சார்ந்த ஃபண்டுகள் மூலம் நம்முடைய முதலீட்டை திட்டமிடலாம்.

அதை எப்படி திட்டமிடுவது யாருக்கு எந்த ஃபண்ட் சரியாக இருக்கும். எப்படி மியூச்சுவல் ஃபண்ட் ஓய்வுக் கால நிதியை உருவாக்க உதவுகிறது என்பதையெல்லாம் தெரிந்துகொள்வது அவசியம்.

நாணயம் விகடன் நிகழ்ச்சி

அதற்காக நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து 'உங்கள் ஓய்வுக் காலத்துக்கு மியூச்சுவல் ஃபண்ட் எப்படி உதவும்?.' என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை வரும் அக்டோபர் 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதில் மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஏ.கே.நாராயண், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி ஆகியோர் விரிவாக மியூச்சுவல் ஃபண்ட் பற்றியும் ஓய்வுக்கால நிதியை உருவாக்குவது பற்றியும் பேசுகிறார்கள்.

உற்சாகமான ஓய்வுக் காலம்

இதில் கலந்துகொள்ள முற்றிலும் அனுமதி இலவசம். இருந்த இடத்திலிருந்தே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன் அடையலாம். இதற்குப் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.



from Latest News https://ift.tt/wtXW0VY

Post a Comment

0 Comments