https://gumlet.vikatan.com/vikatan/2022-09/3dac58c7-e627-4b6d-b5d6-dda876456f34/Untitled_14.jpg``காந்தி குடும்பம் இல்லாமல் காங்கிரஸுக்கு எந்த அடையாளமும் இருக்காது!" - மூத்த தலைவர் திக்விஜய சிங்

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு அடுத்தமாதம் 17-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. முதலில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக வேண்டும் எனக் கூறிவர, ராகுல் காந்தியும் தொடர்ச்சியாக அதனை மறுத்துவந்தார். அதையடுத்து, காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் போட்டியிடுவதாகப் பேச்சுக்கள் அடிபட்டன.

சசி தரூர் - அசோக் கெலாட்

பின்னர், ராஜஸ்தான் அரசியலில் சில நெருக்கடிகள் எழ, அசோக் கெலாட் உடனடியாக இன்று டெல்லிக்கு விரைந்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்தார். அதன்பிறகு, தலைவர் பதவிக்கான தேர்தலில் தான் போட்டியிடவில்லை என செய்தியாளர்களிடம் அசோக் கெலாட் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தற்போது, தேர்தலில் வேட்புமனு செய்வதற்குக் கடைசி நாளான இன்று, சசி தரூர் மற்றும் மூத்த தலைவர் திக்விஜய சிங் வேட்புமனு தாக்கல் செய்யவிருப்பது உறுதியாகியுள்ளது.

திக்விஜய சிங்

இந்த நிலையில் தனியார் ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த திக்விஜய சிங், ``இப்போதுவரை, அசோக் கெலாட்தான் எங்களின் அதிகாரபூர்வ வேட்பாளராக இருக்கலாம் என்று கருதப்பட்டது. அசோக் கெலாட் போட்டியிட்டிருந்தால், நாங்கள் அதை மதித்திருப்போம். எப்போதும் அவர் காங்கிரஸுக்கு விஸ்வாசமாக இருந்துவருகிறார். ஆனால் ராஜஸ்தானில் நடந்த துரதிஷ்டவசமான சம்பவத்தால் இது தவிர்க்கப்பட்டிருக்கலாம்" என்று கூறினார்.

சோனியா - ராகுல் காந்தி

மேலும் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவு மற்றும் நெருக்கடி குறித்துப் பேசிய திக்விஜய சிங், ``இந்தக் கட்சிக்குள் பலமுறை பிளவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் 99 சதவிகித காங்கிரஸார், சுதந்திரத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி தேசத்திற்குச் சேவை செய்த குடும்பத்தை ஆதரித்திருக்கின்றனர். மேலும் நேரு-காந்தி குடும்பம் இல்லாமல் காங்கிரஸுக்கு எந்த அடையாளமும் இருக்காது" எனத் தெரிவித்தார்



from Latest News https://ift.tt/UZh8Yyc

Post a Comment

0 Comments