ஆபாசப் படங்களை பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் கூட பார்க்கிறார்கள் என போப் ஆண்டவர் வேதனை தெரிவித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன், ரோமில் படிக்கும் பாதிரியார்களின் பலதரப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போப் பிரான்சிஸிடம், மொபைல் மூலம் இணையதள பயன்பாடு குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "இணைய உலகில் உலவும் ஆபாச படங்களால் தீமையும், அபாயமும் விளைகிறது. சாமானியர்கள் மட்டுமல்லாது பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கூட ஆபாச தளங்களை பார்க்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.

செல்போன், இணையம் போன்ற நவீன தொழில்நுட்ப சாதனங்கள், வாழ்க்கையில் நன்மையை விளைவிப்பதற்காகதான் பயன்படுத்த வேண்டும். நானும் தொடர்ந்து ஆபாச படங்களை பார்ப்போருக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்துவருகிறேன். ஃபர்னோகிராஃபி குறித்து பேசுவதற்காக என்னை மன்னியுங்கள். ஆனால், இப்படியான ஆபாச வீடியோக்களை பார்ப்பதால், அதிலிருந்து கெட்ட சக்திகளான சாத்தான் வெளியே வந்து, இதயத்தை சலனப்பட வைக்கிறது.

அரசு தரப்பில் இருந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. என்றாலும் எல்லோரும் தங்களுடைய செல்போனில் ஆபாச படங்களை வைத்திருக்காமல் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். அப்போதுதான் சலனம் இல்லாமல் வாழ முடியும். ஏனெனில் ஆபாச படங்களை பார்ப்பது பெரும் பாவமாகும்" என தெரிவித்திருக்கிறார்
from Latest News https://ift.tt/LETSkXq
0 Comments