சண்டிகர் மாநிலத்தின் தனாஸ், ஈ.டபிள்யூ.எஸ் காலனியில் வசிக்கும் கன்ஷியாம் (19) என்ற இளைஞர், தீபாவளியன்று தன் நண்பர்களுடன் அடுக்குமாடிக் குடியிருப்பின் வெளியே பட்டாசு வெடித்திருக்கிறார். அப்போது, பக்கத்து குடியிருப்பில் வசிக்கும் கன்ஷியாமின் உறவினரான ராஜ்குமார் (40), வெடி வெடிப்பதை நிறுத்துமாறு கூறியிருக்கிறார்.
இதனால் கோபமடைந்த கன்ஷியாமும் அவர் நண்பர்களும் ராஜ்குமாரின் வீட்டுக்குள் நுழைந்து அவரைத் தாக்கத் தொடங்கினர். அப்போது அவர் மூத்த சகோதரர் தேவிந்தர், மருமகன் ஆஷிஷ் தலையிட்டு தடுத்தபோது, அந்தக் கும்பல் அவர்களையும் தாக்கியிருக்கிறது. மேலும், கன்ஷியாம் ஆஷிஷை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். அதையடுத்து ஆஷிஷ், ராஜ் ஆகியோர் அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சாரங்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு பதிவுசெய்த போலீஸார்,
கன்ஷியாம் அவர் நண்பர்களைக் கைதுசெய்தனர். அவர்கள்மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 147/148 (கலவரம்), 149 (சட்டவிரோதமான கூட்டம்), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 324 (ஆபத்தான ஆயுதங்களால் காயப்படுத்துதல்), 452 (வீடு அத்துமீறல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்தனர்.
from Latest News https://ift.tt/cdpfHXN
0 Comments