https://gumlet.vikatan.com/vikatan/2022-10/5a5d487a-68db-4abd-ba63-40610cb0fa45/WhatsApp_Image_2022_10_30_at_12_29_42_AM.jpeg`நாம செத்துப் போயிடலாம் வாங்க!’ – ஆற்றில் குதித்த தாய், கதறிய குழந்தைகள்... திருச்சியில் சோகம்

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை இலந்தை கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் – அங்கம்மாள் தம்பதியர். இத்தம்பதியருக்கு 11 மற்றும் 8 வயதில் இரு மகன்கள் உள்ளனர். மணிகண்டன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், குடித்துவிட்டு மனைவி அங்கம்மாளுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், தீபாவளியன்று இரவு மணிகண்டனுக்கும் அங்கம்மாளுக்கும் இடையே கடுமையான பிரச்னை நடந்திருக்கிறது. அதையடுத்து, விடிந்ததும் அக்டோபர் 25-ம் தேதியன்று திருச்சி பெட்டவாய்த்தலை கணேசபுரத்தில் உள்ள தன்னுடைய அக்கா வீட்டிற்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு, மகன்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அங்கம்மாள் அழுதபடியே வீட்டை விட்டுக் கிளம்பியுள்ளார். திண்டுக்கல்லிலிருந்து திருச்சிக்கு வந்த அங்கம்மாள், பெட்டவாய்த்தலையில் உள்ள தன்னுடைய அக்கா வீட்டிற்குச் செல்லாமல், மகன்கள் இருவரோடு திருச்சி முக்கொம்பு சுற்றுலாத் தலத்தில் வந்து இறங்கியிருக்கிறார்.

அங்கம்மாள்

அதையடுத்து முக்கொம்பில் காவிரி நடுக்கரை ஆற்றுப் பகுதிக்குச் சென்றவர், மகன்கள் இருவரையும் கையோடு பிடித்துக்கொண்டு, ‘நாம உயிரோட இருந்தா பிரச்னைதான். வாங்க நாம மூணு பேரும் ஆத்துல விழுந்து செத்துப் போயிடலாம்!’ எனச் சொல்லியிருக்கிறார். இதனைக்கேட்டு பதறிப்போன மகன்கள் இருவரும் அம்மாவின் கையை உதறிவிட்டு ஆற்றின் கரையிலேயே நின்று கொண்டதோடு, அங்கம்மாளை தடுத்து நிறுத்தியிருக்கின்றனர். இருந்தும் தற்கொலை எண்ணத்தில் உறுதியாக இருந்த அங்கம்மாள், ஆற்றில் ஆழமான பகுதியில் இறங்க வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். கண் முன்னே தாய் ஆற்றில் விழுந்து வெள்ளத்தில் மூழ்கியதைப் பார்த்து, கதறி அழுதபடியே மகன்கள் இருவரும் கரையில் நின்றுள்ளனர். அருகில் ஆள்நடமாட்டம் எதுவுமில்லாததால், கணேசபுரத்திலுள்ள அவர்களுடைய பெரியம்மாவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின்னரே, போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அங்கம்மாளை தேடும் பணியில் இறங்கினர்.

கரை ஒதுங்கிய சடலம்

இருந்தும் அங்கம்மாளின் சடலம் 26,27,28 என மூன்று நாள்களாகியும் கிடைக்காமல் போனது. 3 நாள்களுக்கு மேலாகியும் அங்கம்மாளின் சடலம் கிடைக்காததால் வாத்தலை காவல் நிலைய போலீஸார் நோட்டீஸ் அடித்து தேட, குடும்பத்தாரும் தீயணைப்புத் துறையினர் என ஆளாளுக்கு ஒவ்வொரு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று (அக்டோபர் 29-ம் தேதி) மதியம் சுமார் ஒரு மணியளவில், ஸ்ரீரங்கம் மேலூர் அய்யனார் கோயில் அருகே காவிரி ஆற்றின் கரையோரம் முட்புதரில் அங்கம்மாளின் சடலம் கரை ஒதுங்கியிருந்தது தீயணைப்புத்துறை அதிகாரிகளின் கண்ணில் பட்டிருக்கிறது. அதையடுத்து அங்கமாளின் சடலம்  கைப்பற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

96 மணி நேர தீவிர தேடுதலுக்குப் பிறகு, அங்கம்மாளின் சடலம் கிடைத்திருக்கிறது. ‘அங்கம்மாள் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டுவிட்டார்’ என்ற தகவல் கிடைத்ததுமே, அங்கம்மாளின் கணவர் மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். ஒருவழியாக அக்கம் பக்கதினர் அவரைக் காப்பாற்ற, தற்போது கரூர் அரசு மருத்துவமனையில் மணிகண்டன் சிகிச்சை பெற்று வருகிறார். பேச முடியாத அளவிற்கு படுத்த படுக்கையாகக் கிடக்கும்  மணிகண்டனின் உடல்நிலை சரியான பிறகுதான், அங்கம்மாளின் இறப்பிற்கான காரணம் என்னவென்று தெரியவரும் என்கின்றனர்.



from Latest News https://ift.tt/65gWL2I

Post a Comment

0 Comments