https://gumlet.vikatan.com/vikatan/2022-10/75152b3e-82e8-4ab5-be47-14a050869c18/E_LLM6EVkAILRSa.jfifமான நஷ்ட வழக்கு: பாஜக ஐ.டி பிரிவு தலைவர் ரூ.10 கோடி தர வேண்டும்! - அமைச்சர் செந்தில் பாலாஜி நோட்டீஸ்

தமிழ்நாடு பா.ஜ.க ஐ.டி பிரிவு தலைவராக உள்ள நிர்மல் குமார், சமீபத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை குறித்து யூடியுப் சேனல் ஒன்றில் பேசியிருந்தார். அந்த வீடியோவில், காந்தி ஜெயந்தி அன்று தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக மதுவிற்பனை நடைபெறுவதாகும், அதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறியிருந்தார். அது தொடர்பான வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில், நிர்மல் குமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பட்டிருக்கிறது. அந்த நோட்டீஸில், அடிப்படை ஆதாராம் இல்லாமல், தனது நற்பெயருக்கு கலங்கும் விளைவிக்கும் வகையில் பேசியிருக்கும், பா.ஜ.க ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மான நஷ்ட ஈடாக ரூ. 10 கோடி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், சம்பந்தப்பட்ட ட்விட்டர் பதிவை நீக்க வேண்டும்.

பா.ஜ.க ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார்

இவற்றை ஒரு வாரத்தில் செய்யத் தவறினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, ட்விட்டர் மற்றும் யூடியூப் பதிவுகளை நீக்கும்படி யூடியூப் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நிர்மல் குமார் தனது ட்விட்டர் பதிவில்,"நான் என்ன 10 பார் வச்சிருக்கேனா என்ன, என்கிட்ட போய் 10 கோடி கேட்டிருக்காரு... நல்லதா போச்சு, திருட்டுத்தனமா 24 மணி நேரமும் சரக்கு விக்கிறது முதல் கள்ளச் சந்தை விற்பனை வரை இதே வழக்கில் நடத்திருவோம்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.



from Latest News https://ift.tt/vGDxwHc

Post a Comment

0 Comments