https://gumlet.vikatan.com/vikatan/2019-05/109adf12-ba55-4ff0-892e-fd54da5b4edf/154024_thumb.jpgடெல்லி அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டியதில் ரூ.1,300 கோடி ஊழல்; விசாரணைக்கு பரிந்துரைத்த விஜிலென்ஸ்

டெல்லியில் அரசுப் பள்ளி வகுப்பறைகள் கட்டியதில் ரூ.1,300 கோடி ஊழல் நடந்திருப்பது குறித்து ‘சிறப்புப் புலனாய்வு அமைப்பு ‘ (specialised agency) விசாரணை நடத்த, விஜிலென்ஸ் இயக்குநரகம் பரிந்துரை செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

டெல்லி அரசுப் பள்ளிகளில் கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கூடுதல் வகுப்பறைகளைக் கட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து 193 பள்ளிகளில் 2,405 வகுப்பறைகள் கட்டும் பணி பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பொதுப்பணித்துறை, வகுப்பறைகளின் தேவையைக் கண்டறிய ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டது. அதனடிப்படையில், 194 பள்ளிகளில் 7,180 சமமான வகுப்பறைகள் (ECR) தேவை என்று கணித்தது. இது 2,405 வகுப்பறைகளின் தேவையைவிட மூன்று மடங்கு அதிகம். அதைத் தொடர்ந்து, 193 பள்ளிகளில் 2,405 வகுப்பறைகள் கட்டியதில் மிகப்பெரிய முறைகேடுகள், ஊழல்கள் நடந்திருப்பதாகப் புகார் எழுந்தது.

விஜிலென்ஸ் இயக்குநரகம்

இது தொடர்பான முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப் பரிந்துரைக்கும் டெல்லி அரசின் விஜிலென்ஸ் இயக்குநரகத்தின் அறிக்கை தலைமைச் செயலரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், ``டெல்லியில் அரசுப் பள்ளி வகுப்பறைகள் கட்டியதில் டெண்டர் நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை. விதிகள் மீறப்பட்டிருக்கின்றன. இதனால், டெல்லி அரசுப் பள்ளிகளுக்கான 2,405 வகுப்பறைகளைக் கட்டியதில் ரூ.1,300 கோடி முறைகேடுகள் நடந்திருக்கின்றன. இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.



from Latest News https://ift.tt/3XASvzN

Post a Comment

0 Comments