https://gumlet.vikatan.com/vikatan/2022-11/7c91d1e3-4b0d-4715-b652-5b358959159c/monk_g4abb08a50_640.jpgதாய்லாந்து புத்த மத கோயில்: போதை மருந்து சோதனையில் சிக்கிய துறவிகள்!

தாய்லாந்திலுள்ள புத்த துறவிகள் நடத்தும் கோயில் ஒன்று, தற்போது துறவிகள் இன்றி கைவிடப்பட்டுள்ளது. போதை மருந்து பரிசோதனையில் தோல்வியடைந்ததே இதற்கு காரணம் என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

தாய்லாந்து நாட்டில் உள்ள பெட்சாபுன் மாகாணத்தின் பங் சாம் பான் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் மடாதிபதி உட்பட நான்கு துறவிகளுக்கு மெத்தம்பேட்டமைன் பரிசோதனைக் கடந்த திங்கட்கிழமை (28-11-22) அன்று செய்யப்பட்டது. அப்போது அவர்கள் போதை பொருளான மெத்தம்பேட்டமைன் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது என மாவட்ட அதிகாரி பூன்லெர்ட் திண்டாப்தை அங்குள்ள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்,

இதைத் தொடர்ந்து அந்த துறவிகள் அங்குள்ள சுகாதார மருத்துவமனையிலுள்ள மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு தற்போது அந்த புத்த கோயில், துறவிகள் இன்றி காலியாக உள்ளதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். புத்த துறவிகளுக்கு உணவு தானம் செய்தல் புண்ணியம் என்று மக்கள் நம்புகின்றனர். மேலும், மக்களின் மதநம்பிக்கை மற்றும் வழிபாடுகளைக் கருதி வேறு புத்த துறவிகள் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகம் கூறுகையில், "மியன்மரின் ஷான் மாநிலத்தில் இருந்து லாவோஸ் வழியாக மெத்தம்பேட்டமைன் தாய்லாந்துக்குள் கொண்டுவரப்படுகிறது. தெருவில், இந்த மாத்திரைகள் 20 (baht)பாட் (சுமார் $0.50)-க்கும் குறைவாக விற்கப்படுகின்றன" என்கின்றனர்.



from Latest News https://ift.tt/SQdRpPz

Post a Comment

0 Comments