https://gumlet.vikatan.com/vikatan/2022-11/5dd8bc2c-c7fc-4316-bbbb-d36f7714d2c7/New_Project__12_.jpgகுஜராத்: துணை ராணுவ வீரர்கள் இருவர் சுட்டுக் கொலை; தேர்தல் பணியின்போது சக வீரர் வெறிச்செயல்!

குஜராத் மாநிலத்தில் வருகிற டிசம்பர் மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் தற்போது ராணுவ வீரர்கள் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில், ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த தகராறில் எகே-56 துப்பாக்கியால் சுடப்பட்டதில் இரண்டு ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்

இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி, ``நேற்று (26-11-22) மாலை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் எகே-56 துப்பாக்கியைக் கொண்டு சுட்டதில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைக்காக, சம்பவ இடத்திலிருந்து 150 கி.மீ தொலைவிலுள்ள ஜாம்நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒருவரின் வயிற்றில் தோட்டா துளைத்து காயம் ஏற்பட்டது, மற்றவரின் காலில் அடிபட்டது. ஆனால் அவர்களுக்குள் எதனால் தகராறு ஏற்பட்டது என்பது தெரியவில்லை. மேலும் இவர்கள் இந்தியன் ரிசர்வ் பட்டாலியனினின் (IRB) ஒரு பகுதியாக மணியாற்றியவர்கள். மணிப்பூரைச் சேர்ந்த இவர்கள், மத்திய ஆயுதக் காவல் படையுடன் குஜராத்தில் தற்போது இருக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.



from Latest News https://ift.tt/Z5Aajin

Post a Comment

0 Comments