மும்பையைச் சேர்ந்த அஃப்தாப் என்பவர் கடந்த மே மாதம் தன் காதலி ஷ்ரத்தாவை டெல்லிக்கு அழைத்துச் சென்று வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தபோது, அவரை கழுத்தை நெரித்துக் கொலைசெய்தான். கொலைசெய்த பிறகு உடலை 35 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்து பல்வேறு இடங்களில் போட்டுவிட்டான். இன்னும் ஷ்ரத்தாவின் தலைப்பகுதி கிடைக்கவே இல்லை. போலீஸார் அஃப்தாப் பூனாவாலாவிடம் ஒரு வாரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். ஷ்ரத்தாவின் உடல் உறுப்புகளை போட்டதாகச் சொல்லப்படும் இடங்களுக்கு அவனை நேரில் அழைத்துச் சென்று சில உடல் உறுப்புகளை கைப்பற்றினர். டி.என்.ஏ அறிக்கைக்குப் பிறகுதான் அவை ஷ்ரத்தாவின் உடல் உறுப்புக்களா என்று தெரியவரும். அஃப்தாப் அடிக்கடி வாக்குமூலத்தை மாற்றிக்கொண்டே இருந்ததால், அவனுக்கு உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது. தற்போது அவனது விசாரணை முடிந்துவிட்டதால் அவனை போலீஸார் திகார் சிறையில் அடைத்துவிட்டனர்.
சிறையில் அவன் 4-வது நம்பர் பிளாக்கில் அடைக்கப்பட்டிருக்கிறான். 4-வது நம்பர் சிறையில்தான் முதன்முறையாக குற்றம் செய்பவர்கள் அடைக்கப்படுவது வழக்கம். அஃப்தாப் தற்போது தனி அறையில் அடைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எந்நேரமும் அவனது அறைக்கு அருகில் போலீஸார் பாதுகாப்புப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். சிறையைவிட்டு வெளியில் வர முடியாத அளவுக்கு சாப்பாடுகூட போலீஸார் நேரில் எடுத்து சென்று கொடுத்து வருகின்றனர். சில நாள்களுக்கு சிறையின் அறையிலிருந்து வெளியில் வர முடியாது என்று சிறைத்துறையினர் தெரிவித்தனர். அஃப்தாப் தன் காதலியை கொலைசெய்து உடல்களை பல துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு மொபைல் டேட்டிங் ஆப் மூலம் மேலும் ஒரு பெண் டாக்டருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. அதே மொபைல் ஆப் மூலம்தான் ஷ்ரத்தாவும் அஃப்தாபுக்கு அறிமுகமானார். புதிதாக அறிமுகமான பெண் டாக்டருடன் அடிக்கடி வெளியில் சென்று வந்துள்ளான். இதையடுத்து அந்த பெண் டாக்டரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். அதோடு சம்பந்தப்பட்ட மொபைல் டேட்டிங் ஆப் நிர்வாகத்துக்கும் போலீஸார் கடிதம் எழுதி வேறு யாருடன் அஃப்தாப் தொடர்பில் இருந்துள்ளான் என்ற விபரத்தை கொடுக்கும்படி கேட்டுள்ளனர்.
from Latest News https://ift.tt/fBdzuAh
0 Comments