அமெரிக்காவில், மேரிலாண்ட் மாநிலத்தில் நேற்று இரவு சிறிய ரக விமானம் எதிர்பாராக விதமாக மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விமானம் கீழே விழாமல் கம்பத்திலேயே தொங்கிக் கொண்டிருப்பதால் பதற்றமான சூழல் தொடர்கிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், அந்தப் பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக 90,000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மின்தடை பாதிக்கப்பட்டுள்ளன.
மின்சாரத் துண்டிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, மாலை 5.30 மணியளவில் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சுமார் 100 அடிக்கு இடையே சிக்கியிருக்கும் அந்த விமானம் கீழே விழாமல் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாண்ட்கோமெரி கவுண்டி தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் தலைவர் ஸ்காட் கோல்ட்ஸ்டைன் செய்தியாளர்களிடம், "கோபுரத்தை தரையிறக்குவது பாதுகாப்பானதா என்பதை ஆய்வு செய்து வருகிறோம்.
மேலும், நகருக்கு வேறு வழிகளில் மின்சாரம் வழங்க ஆலோசித்து வருகிறோம். இந்த பகுதியில் பனிமூட்டமான வானிலை நிலைமைகளை மேலும் சிக்கலாக்குகிறது. விமானம் சங்கிலியில் பிணைக்கப்பட்டு கட்டப்படும் வரை எதுவும் உறுதியாக கூற இயலாது" எனத் தெரிவித்திருக்கிறார்.
from Latest News https://ift.tt/iKMyCDo
0 Comments