https://gumlet.vikatan.com/vikatan/2022-11/01a2e67e-a581-45e9-b55a-f794c7c61ba6/95798187.webpமுதல்வர் பதவி: அஸ்ஸாம் காமாக்கியா அம்மனை ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் சென்று தரிசித்த ஏக்நாத் ஷிண்டே

கடந்த ஜூன் மாதம் சிவசேனா இரண்டாக உடைந்தது. மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்தார். சிவசேனாவை உடைத்து அதிலிருந்து 40 எம்.எல்.ஏ-க்களை தனியாக பிரித்துக்கொண்டு வந்த ஏக்நாத் ஷிண்டேயுடன் சேர்ந்து பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்திருக்கிறது. சிவசேனாவிலிருந்து எம்.எல்.ஏ-க்களை பிரித்தபோது அவர்களை அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தி ஹோட்டலில் ஷிண்டே தங்கிவைத்திருந்தார். ஜூன் 22 முதல் 29-ம் தேதி வரை அங்கு தங்கியிருந்தனர்.

அந்நேரம் அங்குள்ள புகழ்பெற்ற காமாக்கியா அம்மனை தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் சென்று தரிசனம் செய்தார். தற்போது ஷிண்டே பதவியேற்று 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தனக்கு முதல்வர் பதவி கிடைக்க உதவிய காமாக்கியா அம்மனுக்கு தனது எம்.எல்.ஏ-க்களுடன் சென்று நன்றிகூற ஏக்நாத் ஷிண்டே திட்டமிட்டிருந்தார். இதற்காக நேற்று தனி விமானத்தில் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அவர்களது குடும்பத்துடன் அஸ்ஸாம் புறப்பட்டுச் சென்றார். அங்கு கடந்த ஜூன் மாதம் அவர்கள் ஒரு வாரத்திற்கும் மேல் தங்கியிருந்த அதே ஹோட்டலில் மீண்டும் சென்று தங்கினர்.

காமாக்கியா அம்மனை தரிசித்த ஷிண்டே

பின்னர் காமாக்கியா அம்மனை அனைவரும் சென்று வழிபட்டனர். அவர்கள் அனைவருக்கும் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா விருந்தளித்து கௌரவித்தார். இது குறித்து ஏக்நாத் ஷிண்டே, ``அஸ்ஸாம் முதல்வர் மா காமாக்கியா கோயிலுக்கு வரும்படி எங்களுக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று வந்தோம். அனைவரது அமைதி மற்றும் மகிழ்ச்சிக்காக அம்மனை வேண்டிக்கொண்டோம். அம்மன் தரிசனம் மிகவும் சிறப்பாக இருந்தது" என்று தெரிவித்தார்.



from Latest News https://ift.tt/gfiNhpI

Post a Comment

0 Comments