https://gumlet.vikatan.com/vikatan/2022-10/1af92bd3-0899-41e0-96a1-d64298138203/635f013aeef8f.jpgபெங்களூரு: பைக் டாக்ஸியில் பயணித்த கேரள இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - பெண் உட்பட மூவர் கைது

நாடு முழுவதிலும் குறிப்பாக சென்னை, மும்பை, பெங்களூரு உள்பட பெருநகரங்களில், ‘ஓலா’, ‘ரேபிடோ’ என, பல வாடகை பைக், கார் சேவைகள் உள்ளன. இவற்றில் பயணிக்கும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பில்லை, பாலியல் சீண்டல்கள் அரங்கேறுகிறது என என, பல பெண்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூருவில் ‘ரேபிடோ’ பைக் சர்வீஸ் மூலம் புக் செய்து பயணித்த பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பைக்

கேரளாவை சேர்ந்த, 22 வயதுப்பெண் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் தங்கி, பி.எம் லே–அவுட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த, 24-ம் தேதி இதே பகுதியிலுள்ள தனது நண்பர் வீட்டுக்குச்சென்று மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. பின், அங்கிருந்து நீலாத்திரி பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு செல்ல, ’ரேபிடோ’ பைக் டாக்ஸி புக் செய்தபோது, டிரைவர் சஹாபுதீன் (26) என்பவர், அப்பெண்ணை பிக் அப் செய்து அவரின் இடத்துக்கு பைக்கில் கூட்டிச்சென்றார்.

குற்றவாளிகள் சஹாபுதீன், அக்தார்.

அப்போது, அந்தப்பெண் மது போதையில் ‘சிகரெட் வாங்க வேண்டும்’ கேட்டுள்ளார். அவர் போதையில் இருப்பதை தெரிந்துகொண்ட சஹாபுதீன், தனது நண்பரான அக்தருக்கு (24) போன் செய்து தகவலைச்சொல்லியதும், பெண்ணை வன்கொடுமை செய்ய இருவரும் திட்டமிட்டனர். சஹாபுதீன் அப்பெண்ணை தான் வசிக்கும் வீட்டுக்கு அழைத்துச் சென்று, இருவரும் அப்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மயக்க நிலையிலிருந்த அப்பெண் கண்விழித்ததும் வலியை உணர்ந்து, நண்பர்களிடம் இச்சம்பவத்தை கூறி விட்டு மருத்துவமனை சென்றுள்ளார். பின், எலெக்டிரானிக் சிட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். விசாரணை நடத்திய போலீஸார், சஹாபுதீன், அக்தார் மற்றும் அவரின் தோழி ஒருவர் என, மூவரை கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மூவரும் பீஹாரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

பாலியல் பலாத்காரம்

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸார் நம்மிடம் கூறுகையில், ‘``சஹாபுதீன், அக்தார் கேரள பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யும் போது, அந்த அறையில் அக்தாரின் தோழியும் இருந்துள்ளார். பாலியல் வன்கொடுமை செய்ய அப்பெண்ணும் இவர்களுக்கு உதவியுள்ளார். இவர்கள் பீகாரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சஹாபுதீன், அக்தார் இதற்கு முன் இதேபோன்று சம்பவங்களில் ஈடுபட்டார்களா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்படுகிறது,’’ என்றார்.



from Latest News https://ift.tt/W6MGTDL

Post a Comment

0 Comments