தற்போது டெல்லியில் கடும் குளிர் நிலவிவரும் சூழலில் பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். வெறும் டி-ஷர்ட் மட்டும் அணிந்து நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கருத்து தெரிவித்திருக்கிறார். ``ராகுல் காந்தி மனிதாபிமானமுடையவர். அசாதாரணமானவர். எல்லோரும் டெல்லியின் குளிரில் உறைந்து ஜாக்கெட் அணிந்து கொண்டிருக்கும்போது, அவர் டி-ஷர்ட்களில் யாத்திரைக்காக வெளியே செல்கிறார்.
அவர் ஒரு யோகியைப் போல் தனது 'தபஸ்யா' தியானமாகவே, எந்தப் பக்கமும் கவனத்தை சிதறவிடாமல் யாத்திரையை மேற்கொள்கிறார். ராகுல் காந்தி கடவுள் ராமரைப் போல. அவரின் செயல்பாடுகளை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியும். ராகுல் காந்தி உத்தரப்பிரதேசத்துக்கு வருவார். ராமர் வருவதற்கு முன்னர் அவர் பதாகையை பரதன் சுமந்து சென்றது போல, நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்" எனத் தெரிவித்திருந்தார். இதற்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்திருந்தது.
பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, "காந்தி குடும்பத்தை திருப்திப்படுத்தும் விதமாக காங்கிரஸ் தலைவர்களின் பேச்சு அமைந்திருக்கிறது. ஊழல்வாதியான ராகுல் காந்தியை ராமருடன் ஒப்பிட்டு காந்தி குடும்பத்தை திருப்திப்படுத்த காங்கிரஸ் எந்த எல்லைக்கும் செல்லும். இதே காங்கிரஸ்தான் ராமர் ஒரு கற்பனை உருவம் என்று சொல்லிக் கொண்டிருந்தது" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், "ராகுல் காந்தி ராமர் அல்ல, ஆனால் அவர் ராமர் காட்டிய பாதையில் செல்லலாம். அதில் நடக்க காங்கிரஸுக்கு உரிமை இல்லை என்று பா.ஜ.க-வினர் கூறுகிறார்கள். ஆனால், பா.ஜ.க ராமர் வழிக்கு பதிலாக ராவணன் வழி நடப்பதால்தான் இங்கு சிக்கல்" என்று தெரிவித்திருக்கிறார்.
from Latest News https://ift.tt/3et8MHZ
0 Comments