https://gumlet.vikatan.com/vikatan/2023-01/4a7d8201-535c-4fde-89c8-6583e9f0f48a/Picsart_23_01_29_16_09_43_897.jpgசீர்காழியில் நடைபெற்ற பழைமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா - என்ன ஸ்பெஷல்?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழைமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைமாதம் தீமிதித் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

தேர்

இந்தாண்டுத் திருவிழாவானது கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. எட்டாம் நாள் விழாவான தீமிதி உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை முடிவுற்ற நிலையில் பத்தாம் நாள் திருவிழாவான தேர்த் திருவிழா வெகு விமரிசையாகத் தொடங்கியது. முன்னதாகத் தேரில் எழுந்தருளிய புற்றடி மாரியம்மனுக்குச் சிறப்புத் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தேர் நிலையிலிருந்து புறப்பட்டு நான்கு வீதிகளையும் வலம் வந்தது. பக்தர்கள் பலர் ஆர்வத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேருக்கு முன்பு சிவன், பார்வதி, காளி, அம்மன் உள்ளிட்ட வேடமணிந்த கலைஞர்கள் மேள தாளங்கள் முழங்க நடனம் ஆடினர்.

தேர்

சிறுவர் சிறுமிகளின் சிலம்பாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர். இரண்டு வருட கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பிறகு பல ஊர்களின் பிரத்யேக திருவிழாக்கள் இப்போது மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ளன. அதில் தற்போது சீர்காழி புற்றடி மாரியம்மன் கோயிலும் இணைந்திருக்கிறது.



from Latest News https://ift.tt/JTi64Aa

Post a Comment

0 Comments