https://gumlet.vikatan.com/vikatan/2023-01/7cddbe4e-49b0-4694-904d-59021eef7947/team_india_2022.jpgமுக்கியப் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறவில்லை, ஆனாலும்... - கம்ரான் அக்மல்

இந்திய அணி 2013 -ஆம் ஆண்டுக்குப் பிறகு, கடந்த 10 வருடங்களாக எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வென்று கொடுக்கவில்லை என்று பலரும் விமர்சித்து வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் இந்திய அணிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், " இந்திய அணி கடந்த 10 வருடங்களாக ஐசிசி கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் ஐசிசி கோப்பையை ஜெயித்துக் கொண்டே இருக்க முடியாது. ஐசிசி பட்டத்தை வெல்வது மட்டுமே முக்கியம் என்றால் இதுவரை ஒரு முறைகூட உலக கோப்பையை கைப்பற்றாத தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற அணிகளுக்கு எல்லாம் தடை தான் விதிக்க வேண்டும்.

இந்திய கிரிக்கெட் அணி

ஒவ்வொரு முறையும் முக்கியப் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறாமல் இருக்கலாம். இருப்பினும் இந்திய அணி ஒரு சிறந்த அணிதான் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று இந்திய அணிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். மேலும், "கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளாக பாகிஸ்தானில் சிலர் கடுமையாக உழைத்து உள்நாட்டு கிரிக்கெட்டை அழித்து வருகின்றனர்" என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாட்டை கம்ரான் அக்மல் கடுமையாக விமர்சித்துள்ளார்.



from Latest News https://ift.tt/xqr51UY

Post a Comment

0 Comments