https://gumlet.vikatan.com/vikatan/2023-01/b70d6684-b9ab-4d13-afb0-3a973b9875ee/IMG_20230129_WA0000.jpgநீலகிரி: ஒரே வாரத்தில் 2 பேர் யானை தாக்கி உயிரிழந்த சோகம்; சடலத்துடன் விடிய விடிய போராடும் மக்கள்!

நீலகிரி மாவட்டம், கூடலூர், ஓவேலியைச் சேர்ந்த நௌஷாத், ஜமால் ஆகிய இருவர் நேற்று மாலை தனியார் காப்பி தோட்டம் வழியாக நடந்து சென்றிருக்கின்றனர். அப்போது, புதர் மறைவிலிருந்த யானை ஒன்று திடீரென இவர்களை நோக்கி ஓடி வந்திருக்கிறது. யானையிடமிருந்து தப்பித்து ஓட முயன்றிருக்கின்றனர். ஆனால், இருவரும் யானையிடம் துரதிஷ்டவசமாக சிக்கிக் கொண்டனர். யானை தாக்கியதில் நௌஷாத் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயங்களுடன் அலறிய ஜமாலின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் யானையை விரட்டி ஜமாலை மீட்டனர். நௌஷாத்தின் உடலையும் கைப்பற்றினர்.

மக்கள் போராட்டம்

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் நௌஷாத் உடலை கூறாய்வுக்கு அனுப்ப முயற்சி செய்தனர். ஆத்திரமடைந்த கிராம மக்கள், உடலை வழங்க மறுத்து சடலத்துடன் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பயனும் இல்லை.

இது குறித்து தெரிவித்த ஓவேலி மக்கள், ``யானை - மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் பகுதியாக ஓவேலி இருக்கிறது. கடந்த வாரம் சிவனாண்டி என்ற தொழிலாளியை யானை தாக்கிக் கொன்றது. இன்று நௌஷாத், நாளை யார் என்று தெரியவில்லை. ஆனால், இதை தடுக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அப்பாவி தொழிலாளர்கள்தான் பலியாகி வருகிறோம்.‌ மனிதர்களைத் தாக்கி வரும் குறிப்பிட்ட அந்த யானையைப்‌ பிடிக்கும் வரை போராடுவோம்" என்றனர்.

மக்கள் போராட்டம்

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "இந்தப் பகுதியில் யானைகள் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதையும் மீறி இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்கின்றன. கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்."



from Latest News https://ift.tt/TPWuHaB

Post a Comment

0 Comments