நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகிலுள்ள காந்தள் பகுதியைச் சேர்ந்தவர் மணி என்ற சந்திரசேகர். 44 வயதான இவர், நாய்களை வளர்த்து விற்பனை செய்து வந்திருக்கிறார். மேலும் பில்டிங் கான்ட்ராக்டராகவும் இருந்து வந்திருக்கிறார்.
காந்தள் புதுநகர்ப் பகுதியிலுள்ள இவரின் உறவினர் வீட்டில் ஆட்களை வைத்து கட்டுமானப் பணிககளை மேற்பார்வை செய்து வந்திருக்கிறார். கடந்த ஒரு மாதமாக பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஹாலோ பிளாக் கற்களைக் கொண்டு 10 அடி உயரத்தில் கட்டப்பட்ட சுற்றுச்சுவருக்கு அடியில் மண் நிரப்பும் பணியில் வடமாநிலத் தொழிலாளர்கள் நேற்று ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

சந்திரசேகர் மேற்பார்வை செய்து வந்திருக்கிறார். திடீரென ஹாலோ பிளாக் கற்கள் இவர்கள்மீது சரிந்து விழுந்ததில் சந்திரசேகர், இர்ஃபான் ஆகிய இருவரும் அடியில் சிக்கிக் கொண்டனர். இதைக் கண்டு பதறிய தொழிலாளர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சந்திரசேகர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். படுகாயமடைந்த இர்ஃபான் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
from Latest News https://ift.tt/9tkeBI4
0 Comments