https://gumlet.vikatan.com/vikatan/2023-02/04e018b6-657b-45b7-a0ba-8b42c37c8750/1677216300694.jpgபுதுச்சேரி: முதல்வருக்கு மரியாதை தராத குற்றச்சாட்டு - பெண் ஐபிஎஸ் அதிகாரி பணியிட மாற்றம்!

புதுச்சேரியில் பட்ஜெட்டை இறுதி செய்தவதற்கான கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் கலந்துகொள்வதற்காக வந்த முதல்வர் ரங்கசாமிக்கு சட்டம் - ஒழுங்கு எஸ்.எஸ்.பி தீபிகா ஐ.பி.எஸ் மரியாதை செலுத்தவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, எம்.எல்.ஏ-க்கள் ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், பாஸ்கர் லட்சுமி காந்தன், சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன் உள்ளிட்டவர்கள் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தைச் சந்தித்து புகாரளித்தனர். அத்துடன், ”சீனியர் எஸ்.பி தீபிகா முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. எம்.எல்.ஏ-க்கள் கூறும் பரிந்துரைகளையும் ஏற்பதில்லை. அதனால் அவரை மாற்றிவிட்டு தமிழ் தெரிந்த ஐ.பி.எஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினர்.

உள்துறை அமைச்சரிடம் புகாரளித்த என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள்

அதனடிப்படையில் தலைமைச் செயலாளர் ராஜிவ் வர்மா, டி.ஜி.பி மனோஜ்குமார் லால் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டார் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம். அதன் தொடர்ச்சியாக முதல்வரை அவமதித்த சீனியர் எஸ்.பி தீபிகா விரைவில் இடமாற்றம் செய்யப்படுவார் என்று சபாநாயகர் செல்வமும் கூறியிருந்தார். இந்த நிலையில், நேற்று நாடு முழுவதும் இருக்கும் எட்டு ஐ.ஏஸ்.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். அதில் சீனியர் எஸ்.பி தீபிகாவை ஜம்மு - காஷ்மீருக்கும், காரைக்காலிலிருந்த சட்டம் - ஒழுங்கு சீனியர் எஸ்.பி லோகேஷ்வரனை மிசோராமுக்கும் பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார் மத்திய அரசின் சார்பு செயலர் ராகேஷ் குமார் சிங். அதேபோல மிசோராமில் தற்போது பணிபுரியும் ஐ.ஏ.எஸ் அதிகாரி குலோத்துங்கன், டெல்லியில் பணிபுரியும் பிரிஜேந்திர குமார் யாதவ் ஆகியோர் புதுச்சேரிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.



from Latest News https://ift.tt/D9Zr7PY

Post a Comment

0 Comments