https://gumlet.vikatan.com/vikatan/2023-02/e233cc37-e1ba-4677-8dc3-8f071742378f/960x0.jpgCanada:'ChatGPT'-யை பயன்படுத்தி மோசடி செய்த நிறுவனத்திடம் 90 லட்ச ரூபாயை மீட்ட நபர்!

கடந்த நவம்பர் மாதம் `ChatGPT' என்ற செயற்கை நுண்ணறிவை அமெரிக்காவைச் சேர்ந்த 'Open AI' என்ற நிறுவனம் டெக் உலகிற்கு அறிமுகப்படுத்தியது. மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பது, ஆலோசனைகளை வழங்குவது, அவர்களுடன் உரையாடலில் ஈடுபடுவது, போன்றவற்றை இந்த 'ChatGPT' செய்து வருகிறது.

தற்போது இந்த 'ChatGPT'-யை  பயன்படுத்தி வரும் பலரும் தங்களுக்கு நேர்ந்த சுவாரஸ்யமான அனுபவங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

ChatGPT

அந்தவகையில் கனடாவைச் சேர்ந்த நபர் ஒருவர். 'ChatGPT' -ஐ பயன்படுத்தி மோசடி செய்த நிறுவனத்திடமிருந்து தனது நிறுவனத்துக்கு வரவேண்டிய 90 லட்சம் ரூபாயைப் பெற்றதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

கிரேக் ஐசன்பெர்க் என்பவர்  கனடாவில் வடிவமைப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது நிறுவனம் மற்றொரு நிறுவனத்திற்கு சேவையை வழங்கி இருக்கிறது. ஆனால் அந்த நிறுவனம் அதற்குரிய பணத்தை தர மறுத்திருக்கிறது. இந்நிலையில் கிரேக் ஐசன்பெர்க் ChatGPT- ஐப் பயன்படுத்தி தனது நிறுவனத்துக்கு வரவேண்டிய 109,500 டாலர் (ரூ.90 லட்சம்) பணத்தைப் பெற்றிருக்கிறார்.

இது குறித்து  ட்விட்டரில் பதிவிட்டுள்ள கிரேக் ஐசன்பெர்க், “நாங்கள் பல கோடி மதிப்புள்ள நிறுவனம் ஒன்றிற்கு சேவையை வழங்கினோம். ஆனால் அந்த நிறுவனம் எங்கள் சேவைக்கான பணத்தை தர மறுத்து எங்கள் தொடர்பைத் துண்டித்து விட்டது. இதுபோன்ற சூழல்களில் பொதுவாக நீதிமன்றத்தை அணுகினால் அதிகமாக செலவிட நேரிடும். அப்போதுதான் நான் 'ChatGPT' யைப் பயன்படுத்தினேன். அதனிடம், நீ ஒரு நிறுவனத்தில் நிதித்துறைப் பிரிவில் பணிப்புரிவதாக நினைத்துக்கொள். வாடிக்கையாளர்களிடம் இருந்து நிறுவனத்துக்கு வர வேண்டிய பணத்தை வசூலிப்பதுதான் உன் வேலை.

வாடிக்கையாளர் ஒருவர் 109,500 டாலர் தர வேண்டும். ஆனால் பல முறை மெயில் அனுப்பியும் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனால் அந்தப் பணத்தை வசூலிக்க அவரைப்  பயமுறுத்தும் வகையில் கடிதம் ஒன்றை நீ எழுத வேண்டும் என்று  அறிவுறுத்தினேன். அதன்படி 'ChatGPT'-யும் கடிதம் ஒன்றை எழுதித் தந்தது. அதில் நான் சில திருத்தங்கள் செய்து அந்த நிறுவனத்துக்கு அனுப்பினேன். உடனே அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியிடம்  இருந்து மெயில் ஒன்று வந்தது. சீக்கிரமே உரிய தொகையைத் தந்துவிடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நீதிமன்றம், வக்கீல் என்று எந்த ஒரு செலவுமின்றி பணத்தைப் பெற்றுவிட்டேன்” என்று கிரேக் ஐசன் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.     



from Latest News https://ift.tt/MqLXrJy

Post a Comment

0 Comments