பெண்களுக்கு மிகவும் அபூர்வமாக முகத்தில் தாடி, மீசை வளர்வதுண்டு. பஞ்சாப்பை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு அது போன்ற ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதை ஏற்றுக்கொண்டு இப்போது அவர் புதுவாழ்வு வாழ்கிறார்.
மந்தீப் கவுர் என்ற பெண்ணிற்கு, கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சில ஆண்டுகள் கழித்து திடீரென மந்தீப் கவுர் முகத்தில், தாடி மற்றும் மீசை வளர ஆரம்பித்தது. இதனால் அவரின் கணவர் அவரை வெறுக்க ஆரம்பித்தார். மந்தீப் கவுர், மற்ற பெண்களைப்போல் வெளியில் செல்ல முடியவில்லையே என்று மருகினார். மந்தீப் கவுரை அவரின் கணவர் விவாகரத்து செய்துவிட்டார்.

இதனால் தற்போது தன் பெற்றோர் வீட்டில் வசித்து வரும் மந்தீப் கவுர், தொடர்ந்து தனது தாடி மற்றும் மீசையை வளர்த்து வருகிறார். அதனை அகற்றவில்லை. மேலும், இப்போது வெளியாள்களைப் பற்றி கவலைப்படாமல் தனது அன்றாட வேலையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.
மன அழுத்தத்தை போக்க ஆன்மிகத்தில் அதிக அளவில் ஈடுபட்டு வருகிறார். அடிக்கடி குருத்வாராவிற்கு சென்று வருகிறார். குருசாஹேப் தன்னை ஆசீர்வதிப்பதால் இதை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது தன் சகோதரிகளுடன் சேர்ந்து விவசாய வேலைகளைச் செய்து வரும் மந்தீப் கவுர், தனது உடலில் ஏற்பட்ட மாற்றத்திற்காக முன்னர் பல முறை தன்னைத்தானே அடித்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இப்போது ஆண்களின் பைக்கை ஓட்டுகிறார் மந்தீப் கவுர். ஆடவர் போல் தலையில் டர்பனும் கட்டிக்கொண்டுள்ளார். இதனால் பஞ்சாப் ஆடவர் போல் மாறிவிட்டார். அவரை பார்க்கும் அனைவரும் அவர் ஆண் என்றே நினைக்கின்றனர். அவரும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆன்மிகம், விவசாயம் என்று தனது வாழ்க்கையை மாற்றிக்கொண்டுள்ளார்.

இதேபோல், இங்கிலாந்திலும் ஹர்னாம் கவுர் என்ற பெண்ணிற்கு முகத்தில் தாடி மீசை வளர ஆரம்பித்தது. அவர் ஆரம்பத்தில் அடிக்கடி பியூட்டி பார்லர் சென்று முகத்தில் உள்ள முடிகளை அகற்றிக்கொண்டார். ஆனால் இப்போது அகற்றுவதை விட்டுவிட்டார். அதேபோல், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் குத்துப்பறம்பு, கோளயாடு பகுதியைச் சேர்ந்த ஷைஜா என்ற பெண்ணும், தனக்கு வளரும் மீசையுடன் பெருமையாக வாழ்ந்து வருகிறார்.
31 வயதாகும் ஹர்னாம் கவுர் முகத்தில் தாடி மற்றும் மீசையுடன், இயல்பாக வாழ்ந்து வருகிறார்.
from Latest news https://ift.tt/x683Apg
0 Comments