கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்ட பாரம்பர்யமான தனியார் வங்கியான சிட்டி யூனியன் பேங்கின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் காமகோடியின் பதவிக் காலம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறை வங்கிகளில் சிறப்பான வங்கிகளில் ஒன்றாகத் தொடர்ந்து சிட்டி யூனியன் வங்கி இருந்துவருகிறது. டிஜிட்டல்மயம், காலத்துக்கேற்ற வாடிக்கையாளர் சேவைகள் எனத் தொடர்ச்சியாகப் பல்வேறு ஆக்கபூர்வமான மாற்றங்களை இந்த வங்கி செயல்படுத்தி வருகிறது.
தற்போது இதன் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் டாக்டர் என்.காமகோடியின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில், காமகோடியின் தலைமை செயல் அதிகாரி பதவிக்காலத்தை நீட்டிக்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை அடுத்து சிட்டி யூனியன் பேங்கின் இயக்குநர்கள் குழு தலைமை செயல் அதிகாரி காமகோடியின் பதவிக்காலம் மே 1 முதல் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தலைமை செயல் அதிகாரியாக காமகோடியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதை அடுத்து சிட்டி யூனியன் பேங்கின் பங்கு விலை கடந்த இரு தினங்களில் சுமார் 8% அளவுக்கு உயர்ந்து வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
from Latest news https://ift.tt/17e2zrJ
0 Comments