https://gumlet.vikatan.com/vikatan/2023-04/423f7e2d-ded8-489d-b552-ec8ce09233e0/IMG_20230427_232630.jpgவிருதுநகர்: அரசு அதிகாரியிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட திமுக, கூட்டணிக் கட்சியினர்? - போலீஸ் விசாரணை

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி தாலுகாவுக்குட்பட்ட கம்பிக்குடி ஊராட்சி தரகநேந்தல் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு பணித்தள பொறுப்பாளர் வேலைக்கு ஆள் நியமனம் செய்ய வேண்டியிருந்தது. தொடர்ந்து, இந்த வேலைத்திட்ட பொறுப்பாளர் பணிக்கு ஆள்கள் நியமிப்பதில் உள்ளூர் தி.மு.க-வின் இருதரப்பினரிடையே இருவேறு கருத்து நிலவி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆள் நியமனத்தில் தொடர் இழுபறி நீடித்து வந்துள்ளது.

வாக்குவாதம்

இந்தநிலையில், 100 நாள் வேலைத்திட்ட பணித்தள பொறுப்பாளர்‌ இடத்திற்கு ஆள் நியமிப்பது தொடர்பாக, தி.மு.க. ஒன்றிய செயலாளர்‌ ஒருவரின் தலைமையில் ஒருதரப்பாகவும், மாற்றுக் கருத்துடையவர்கள் இன்னொரு தரப்பாகவும் iரு தரப்பும் ஆதரவாக சில மற்ற கட்சியினரும் காரியாப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. அங்கு நியமன அதிகாரி அலுவலகத்தில் இல்லாததால் துணை அலுவலரான சுகப்பிரியா பணிகளை கவனித்து வந்துள்ளார். இந்தநிலையில் அங்குவந்த தி.மு.க-வை சேர்ந்த இருத்தரப்பினரும் மாறி, மாறி தங்களுக்கு சாதகமாக நடந்துக் கொள்ளவேண்டும் என்று அதிகாரி சுகப்பிரியாவுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் வட்டார வளர்ச்சி அலுவலகமே பரபரப்புக்குள்ளானது. சிறிதுநேரத்தில் கருத்துவேறுபாடுடைய இருதரப்பினருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு பிரச்னை பெரிதாகியுள்ளது. இந்த ஆத்திரத்தில் அதிகாரி சுகப்பிரியாவிடம், இருத்தரப்பினருமே வரிந்துக் கட்டிக்கொண்டு அநாகரிகமான வார்த்தைகளால் அவரை திட்டித்தீர்த்ததாக கூறப்படுகிறது. இந்த களேபரங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் விருதுநகர் மாவட்டத்தில் வாட்ஸ்அப்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், அரசு அதிகாரிகளை அநாகரிகமாக வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்த கட்சி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் சி.பி.எம்‌. கட்சியை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தினரிடம் கேட்கையில், "அதிகாரி சுகப்பிரியாவிடம் அநாகரிகமான முறையில் நடந்துக்கொண்ட ஆளுங்கட்சி பிரமுகர்‌கள் மீது கொடுக்கப்படாமல் அவருக்கு ஆதரவாக வந்தவர்கள் மீதே புகார் தரப்பட்டுள்ளது. இதுபற்றி சங்க அலுவலர்களுடன் ஆலோசித்து இயக்க ரீதியான முன்னெடுப்புக்கு வழிவகுப்போம்" என்றனர்.



from Latest news https://ift.tt/2p9riyY

Post a Comment

0 Comments