https://gumlet.vikatan.com/vikatan/2023-05/4cd00102-972a-406a-9b3d-519a7875ba98/accident_2.jpgநெல்லை: அரசுப் பேருந்து - கார் நேருக்கு நேர் மோதி விபத்து! - கார் ஓட்டுநர் பலியான சோகம்

நெல்லை டவுன் பகுதியில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி இரு பைக்குகள் நேருக்கு நேராக மோதிய சாலை விபத்து நடந்தது. அதில் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்றொரு பைக்கை ஓட்டியவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. அதனால் அந்த பைக்கை ஓட்டிவந்த நீர்காத்தலிங்கம் என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அவர் ஜாமீன் கேட்டு நெல்லை நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.

காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதல்

ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, குடிபோதையில் பைக் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய நீர்காத்தலிங்கம், தினமும் இரவில் டாஸ்மாக் கடைகளை மூடிய பின்னர், அங்குள்ள பாரில் சுத்தப்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார். இந்த நூதன தண்டனை அப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. அந்த தண்டனைக்கு உள்ளான நீர்காத்தலிங்கம், மற்றொரு விபத்தில் சிக்கினார்.

நெல்லை தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவரான நீர்காத்தலிங்கம் நெல்லை வடக்கு பைபாஸ் சாலையில் உள்ள ரயில்வே பாலத்தின் அருகில் காரில் வந்துகொண்டிருந்திருக்கிறார். அப்போது திருப்பூரில் இருந்து நெல்லைக்கு அரசுப் பேருந்து வந்துகொண்டிருந்திருக்கிறது. வேகமாக வந்த காரும் அரசுப் பேருந்தும் ரயில்வே பாலம் அருகில் நேருக்கு நேராக மோதிக் கொண்டன.

சிதைந்து கிடக்கும் கார்

வேகமாக வந்த இரு வாகனங்களும் மோதிக்கொண்டதால் கார் பலத்த சேதமடைந்தது. அதை ஓட்டிவந்த நீர்காத்தலிங்கம் காருக்குள் சிக்கிக் கொண்டார். உடனடியாக தீயணைப்புத் துறையினர் வந்து காரின் இடிபாடுகளில் சிக்கியிருந்த நீர்காத்தலிங்கத்தை மீட்டனர். ஆனால் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

பாளையங்கோட்டை போலீஸார், காரை ஓட்டிவந்த நீர்காத்தலிங்கத்தின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த நீர்காத்தலிங்கம் குடிபோதையில் இருந்தாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்து நடந்த இடம்

இந்த விபத்து காரணமாக நெல்லை-மதுரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வுப் பிரிவினர் விசாரிக்கிறார்கள்.



from Latest news https://ift.tt/jaVPguZ

Post a Comment

0 Comments