https://gumlet.vikatan.com/vikatan/2023-05/a32881b2-1ccf-4026-ae11-60f6c1b728b7/6461b5c86295c.jpgதீயப் பழக்கங்களிலிருந்து உங்களை விடுவிக்கும் ஸ்ரீ அனுமன் சாலீசா - மூல மந்திரமும் தமிழாக்கமும்!

அனுமனை எண்ணி வழிபட்டாலே அங்கு ஸ்ரீராமரும் தோன்றிவிடுவார். ரகுகுல ரட்சகனான ஸ்ரீஅனுமன் தைரியத்தை அளிக்கும் கடவுள். மனதில் குழப்பமோ, கவலையோ, அச்சமோ இருந்தால் அனுமனை தரிசிப்பதோ, தியானிப்பதோ நல்லது. நிச்சயம் உங்கள் துயரங்கள் யாவையும் நீக்க வல்லவர் அனுமன். அதிலும் அனுமனை அனுமன் சாலீசா எனும் இந்த துதி சொல்லி வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்கிறார்கள் ஆன்றோர்கள்.

துளசிதாசர் வட மொழியில் அருளிய அனுமன் சாலீசா எனும் பாடலை மெய்யுருகப் பாடிப் பணிவாருக்கு கிரக தோஷங்கள் நீங்கும். குறிப்பாக சனி பகவானின் அருள் கிடைக்கும். நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெறலாம். இந்த மந்திரத்தை வீட்டில், கோயிலில், திருமடங்களில், தனிமையான இயற்கை சூழலில் அமர்ந்து பாராயணம் செய்யலாம். செவ்வாய்,  சனிக்கிழமை, திருவோண, மூல நட்சத்திர நாள்களில் பாராயணம் செய்வது சிறந்தது. தீய பழக்கங்களில் விடுபட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த அனுமன் சாலீசா பாடல் நிச்சயம் உதவி செய்யும்.

துளசிதாசர் தூங்கிக்கொண்டிருந்தபோது கனவில் கலிபுருஷன் தோன்றினார்.

"துளசிதாசரே, நீர் ராமநாம ஜபத்தின் வழியே மக்களை புண்ணிய ஆத்மாக்களாக மாற்றி வருகிறாய். கலியுக தர்மத்துக்கு இது நல்லதல்ல. இப்படி நீர் செய்தால் நான் யாரைப் பற்ற முடியும்! எனவே ராமநாம ஜபத்தை நிறுத்தும். இல்லாவிட்டால் உம்மைக் கொல்ல வேண்டி வரும்'' என்று மிரட்டினார்.

துளசிதாசர்

கனவிலிருந்து விழித்துக்கொண்ட துளசி தாசர் `ராம பக்தனான தன்னையே கலி இப்படி மிரட்டுவான் என்றால், சாதாரண பக்தர்களின் நிலை என்ன' என்று நினைத்து அஞ்சினார். ராமபக்தர்களுக்கு அச்சம் வந்தால் அங்கே ஆஞ்சநேயர் தோன்றுவது வழக்கமாயிற்றே, உடனே துளசிதாசர் உலகம் உய்ய துன்பங்கள் தீர்க்கும் ஆஞ்சநேயர் துதி ஒன்றைப் பாடத் தொடங்கினார். அந்தத் துதி, அனு மனின் வீரதீர பராக்கிரமங்களைச் சொல்லும் பாடலாக அமைந்தது

அற்புதமான இந்த அனுமன் சாலிசா வைப் பாடுபவர்களுக்குக் கிடைக்கும் பலன்களையும் துளசிதாசரே பட்டியல் இடுகிறார்.

இதைப் பாடி ஆஞ்சநேயரைத் துதிப்பவர்களுக்குத் துன்பங்கள் தீரும். வெற்றிகள் குவியும். அவரைத் தொடர்ந்து துதித்துவந்தால் தடை இல்லாத ஆனந்தம் பெருகும். சிவன ருளும் பரிபூரணமாகக் கிடைக்கும் என்கிறார் துளசிதாசர்.

இசையோடு சேர்ந்துபடித்தாலே 5 முதல் 8 நிமிடத்துக்குள் முடித்துவிடக்கூடிய மிக எளிமையான பாடல் அனுமன் சாலிசா. செவிமடுத்தாலே புத்துணர்ச்சி பெருகும் என்பார்கள்.

மன பயம் உள்ளவர்கள், எதிரிகள் தொல்லையால் அவதிப்படுபவர்கள், காரியத் தடையினால் கஷ்டப் படுபவர்கள், கிரக தோஷங்களால் துன்புறுவோர் அனுமன் சாலிசாவைப் பாராயணம் செய்து வந்தால், அவற்றில் இருந்து விடுபடலாம். குறிப்பாக சனிதோஷம், ஏழரைச்சனி, அஷ்டம சனி நடப்பவர்கள் தவறாமல் ஆஞ்சநேயரைத் துதித்துவந்தால் துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.

இதோ துளசிதாசர் அருளிய அனுமன் சாலிசா...

ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார் பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்

புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரௌ பவன குமார் பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்

அனுமன் தரிசனம்

1. ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர ஜய கபீஸ திஹுலோக உஜாகர

2. ராமதூத அதுலித பலதாமா அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா

3. மஹாவீர் விக்ரம பஜரங்கீ குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ

4. கஞ்சன பரண விராஜ ஸுவேசா கானன குண்டல குஞ்சித கேசா

5. ஹாத் வஜ்ர ஒள த்வஜா விராஜை காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை

6. சங்கர ஸுவன கேசரீ நந்தன தேஜ ப்ரதாப மஹா ஜகவந்தன

7. வித்யாவான் குணீ அதி சாதுர ராம காஜ கரிபே கோ ஆதுர

8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா ராம லக்ஷமண ஸுதா மன பஸியா

9. ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா விகட ரூப தரி லங்க ஜராவா

10. பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே ராமசந்த்ர கே காஜ் ஸவாரே

11. லாய ஸஜீவன் லஷன ஜியாயே ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே

12. ரகுபதி கீனி பஹுத் படாயீ தும் மம ப்ரிய ஹி பரதஸம பாயீ

13. ஸஹஸ வதன தும்ஹரோ யச காவைம் அஸ கஹி ஸ்ரீபதி கண்ட லகாவைம்

14. ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீசா நாரத சாரத ஸஹித அஹீசா

15. யம குபேர திகபால ஜஹாம் தே கவி கோவித கஹி ஸகைம் கஹாம் தே

16. தும் உபகார ஸுக்ரீ வஹிம் கீன்ஹா ராம மிலாய ராஜபத தீன்ஹா

17. தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா லங்கேச்வர பயே ஸப் ஜக ஜானா

18. யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ லீல்யோ தாஹி மதுர பல ஜானூ

19. ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் ஜலதி லாந்தி கயே அசரஜ் நாஹீம்

20. துர்கம காஜ் ஜகத் கே ஜேதே ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே

21. ராம துவாரே தும் ரக்வாரே ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே

22. ஸப் ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா தும் ரக்ஷக காஹூ கோ டர்னா

23. ஆபன் தேஜ் ஸம்ஹாரௌ ஆபை தீனோம் லோக ஹாங்க்தே காம்பை

24. பூத பிசாச நிகட நஹிம் ஆவை மஹாவீர ஜப் நாம ஸுனாவை

25. நாசை ரோக் ஹரை ஸப் பீரா ஜபத நிரந்தர ஹனுமத் வீரா

26. ஸங்கட ஸே ஹனுமான் சோடாவை மன க்ரம வசனத்யான ஜோ லாவை

27. ஸப் பர் ராம் தபஸ்வீ ராஜா தின்கே காஜ் ஸகல தும் ஸாஜா

28. ஒளர் மனோரத ஜோ கோயி லாவை தாஸு அமித ஜீவன் பல பாவை

29. சாரஹு யுக பரதாப தும்ஹாரா ஹை பரஸித்த ஜகத உஜியாரா

30. ஸாது ஸந்த கே தும் ரக்வாரே அஸுர நிகந்தன ராம துலாரே

அனுமன் சாலிசா

31. அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா அஸ் வர தீன் ஜானகீ மாதா

32. ராம் ரஸாயள தும்ஹரே பாஸா ஸதா ரஹெள ரகுபதி கே தாஸா

33. தும்ஹரே பஜன் ராம்கோ பாவை ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை

34. அந்த கால ரகுபதி புர ஜாயீ ஜஹாம் ஜன்மி ஹரிபக்த கஹாயீ

35. ஒளர் தேவதா சித்த ந தரயீ ஹனுமத் ஸேயி ஸர்வ ஸுக கரயீ

36. ஸங்கட ஹரை மிடை ஸப் பீரா ஜோ ஸுமிரை ஹனுமத பல பீரா

37. ஜய் ஜய் ஜய் ஹனுமான் கோஸாயீ க்ருபா கரஹு குருதேவ கீ நாயீ

38. ஜோ சத பார் பாட கர ஜோயீ சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ

39. ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா ஹோய் ஸித்தி ஸாகீ கௌரீஸா

40. துளஸீதாஸ ஸதா ஹரி சேரா கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா

பவன தன்ய ஸங்கட ஹரன மங்கள் மூர்த்தி ரூப்
ராம லகன ஸீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுர பூப் 

ஸியாவர ராமசந்த்ரகீ ஜய பவனஸுத ஹனுமான்கீ ஜய
போலோ பாயீ ஸப ஸந்தனகீ ஜய

தமிழில் அனுமன் சாலீஸா:

ஜெய ஹனுமானே ஞான குணக் கடலே உலகத்தின் ஒளியே வானரர் கோவே.

ராமதூதா ஆற்றலின் வடிவே அஞ்சனை மைந்தா வாயு புத்திரனே வணக்கம்.

வெல்ல முடியாத வீரனே! பெருந்திறல் உருவே ஞானத்தை அருள்வாய், நன்மையைத் தருவாய்.

தங்கத் திருமேனியனே, பட்டாடை அணிபவனே மின்னும் குண்டலமும் அலைமுடியும் கொண்டவனே.

இடி, கொடி போன்ற கரங்கள் கொண்டோனே! முஞ்சைப் பூணூல் தோளில் அணிந்தோனே.
 
ஈசனின் அம்சமே கேசரி மைந்தனே ஒளிமிக்க உன் வீரத்தை உலகமே வணங்குமே

பேரறிவாளியே! பொறுமையின் உச்சமே நற்குண வாரியே! ராமசேவையில் மகிழ்வோனே!

உன் மனக்கோவிலில் ஸ்ரீராமர், அனுமனே ராம சங்கீர்த்தனத்தில் உன் வாசம்!

அனுமன்


நுண்ணிய உருவானாய் அன்னை சீதை முன் தோன்றினாய்! தீயவர் வீழ இலங்கையை எரித்தாய்!

அசுரரை அழித்த பலசாலியே ஸ்ரீராம அவதார நோக்கை முடித்த மாருதியே

சஞ்சீவி கொணர்ந்து லக்குவனை எழுப்ப விஞ்சிய அன்புடன் ராமனுனைத் தழுவினார்.

உனைப் பெரிதும் புகழ்ந்த ராமன் பரதனைப் போல நீ உடனிருப்பாய் என்றார்

ஆயிரம் நாக்கு கொண்ட ஆதிசேஷனே உன் பெருமையைப் புகழ இயலும் என்றும் சொன்னார்

சனகாதி முனிவரும் பிரம்மாதி தேவரும் நாரதர் கலைமகள் அஷ்ட நாகங்கள்

எமன், குபேரன், எண் திசைக் காவலரும், புலவரும் உன் பெருமைகளைச் சொல்ல முடியுமோ!

ஆருயிர் நண்பன் சுக்ரீவன் அரசு பெற்றிட ராமனின் நட்பால் உதவிகள் புரிந்தாய்

உன் அறிவுரையை விபீஷணன் ஏற்றதால் அரியணை அடைந்ததை இவ்வுலகு அறியும்.

வானத்தில் ஒளிர்ந்த ஞாயிறைப் பிடித்தே சுவைதரும் கனியெனப் பிடித்து விழுங்கினாய்

பலவானே, ராமனின் மோதிரம் கவ்வியே நீள் ஆழியைக் கடந்ததில் வியப்பெதும் உண்டோ

உலகினில் முடியாதக் காரியம் யாவையும் நினதருளாலே முடிந்திடும் உண்மை

ராமராஜ்ஜியத்தின் காவலன் நீ, அங்கு நுழைந்திட முடியுமோ  நின்னருள் இன்றி

உன்னைச் சரணடைந்தால் இன்பங்கள் நிச்சயம், காவலாய் உடன் நீ வர ஏதிங்கு அச்சம்

உன்னால் மட்டுமே யாவுமே முடியும், மூவுலகும் உன் பலத்துக்கு முன்னே நடுங்கும்

தீயப்பூதப் பிசாசுகள் நெருங்கிட வருமோ, வீரனுன் திருப்பெயரை  சொல்வாரை

நோய்களும் அகலும் துன்பங்கள் விலகும், பலமிகுந்த நின்திருப்பெயர் சொல்லிட

தொல்லைகள் தீர்ந்திட அனுமன் அருள்வான், மனம், வாக்கு, செயலால் தியானிப்பவர்க்கே

தவம்புரி பக்தர்க்கு வரங்கள் நல்கிடுவாய், ராமனின் பணிகளை நீயே செய்தாய்

வேண்டும் பக்தர்கள் விருப்பங்கள் நிறைவுறும், அழியாக் கனியாம் உன் அனுபூதி பெறுவார்

நான்கு யுகங்களும் உன்புகழ் பாடும், நின் திருநாமமே உலகினில் நிலைத்திடும்

அனுமன்

ஞானியர் நல்லோர் நலம் காப்பவனே, தீயவை அழிப்பாய், ராமனின் இதயக்கனியே

எட்டு ஸித்திகளும் ஒன்பது செல்வங்களும் கேட்டவர்க்கு அருளும் வரத்தை சீதை உனக்கு அளித்தார்

ராம பக்தியின் மூலமே நீதான், என்றும் நீ ஸ்ரீராமனின் சேவகன் நீயே

நின்னைத் தொடர்ந்தே ராமனை அடையலாம், தொடர்ந்து வரும் பிறவித் துன்பம் தீர்க்கலாம்.

உன்னைத் தொழுதிட ராமனடி சேரலாம், ஹரியின் பக்தராய்ப் பெருமைகள் பெறலாம்

மறுதெய்வம் எதுவும் நினையா பக்தரும் அனுமனைத் துதித்தே அனைத்து இன்பமும் பெறலாம்

துன்பங்கள் தீரும் துயரங்கள் மாறும், வல்லிய அனுமனை தியானிப் பவர்க்கே

ஆஞ்சநேயனே வெற்றி, அஞ்சனை மைந்தா வெற்றி, ஞான குருவே நாளும் எமக்கருள் புரிவாய்

நூறுமுறை இப்பாடலைத் துதிப்பவர் எவரோ, அவர் துயர் நீங்கியே ஆனந்தம் அடைவார்

அனுமனின் நாற்பதைப் படிப்பவர் நலம் பல பெறுவார், சிவனருள் பெற்றே ஸித்திகள் அடைவார்

அடியவன் துளஸீ தாஸன் வேண்டுவேன், அனைவர் உள்ளிலும் திருமால் உறைய அருளும்படியே.



from Latest news https://ift.tt/vbx1Wm3

Post a Comment

0 Comments