தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

மகளிருக்கான குண்டு எறிதல் போட்டியில் 17.36 மீட்டர்கள் எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் இந்தியாவின் கிரண் பலியான்!
இந்திய மகளிர் ஹாக்கி அணி வெற்றி!
மகளிருக்கான ஹாக்கி போட்டியில் மலேசிய அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி குரூப் ஏ-வில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்திய மகளிர் அணி!
ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிப்பெற்றார் நிக்கத் ஜரீன்
மகளிருக்கான குத்துச்சண்டை (45-50 கிலோ) போட்டியின் காலிறுதியில் ஜோர்டன் வீராங்கனை ஹனான் நாசரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிப்பெற்றார் இந்தியாவின் நிக்கத் ஜரீன். இந்த வெற்றியின் மூலம் 2024ம் ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிப்பெற்றார்!
அரையிறுதியில் ஐஸ்வர்யா மிஸ்ரா!
மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 52.73 வினாடிகளில் இலக்கை அடைந்து இரண்டாமிடத்தைப் பிடித்தன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் ஐஸ்வர்யா மிஸ்ரா!
சரத் கமல் தோல்வி!
ஆடவர் ஒற்றையர் டேபிள் டென்னிஸின் 'ரவுண்ட் 16' போட்டியில் சீன தைப்பே வீரரிடம் 4-3 என்ற செட் கணக்கில் வீழ்ந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார் சரத் கமல்!
துப்பாக்கிச்சுடுதல்: வெள்ளிப்பதக்கம் வென்றார் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர்

தனிநபர் 50 மீட்டர் 3 பொசிஷன்ஸ் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் 439.7 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல்!
டென்னிஸ்: இறுதிப்போட்டியில் இந்திய இணை!

கலப்பு இரட்டையர் டென்னிஸின் அரையிறுதி போட்டியில் சீன தைப்பேவின் இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ருத்துஜா போஸ்லே இணை!
டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் மானவ் தாக்கர் - மனுஷ் ஷா இணை
டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த மானவ் தாக்கர் மற்றும் மனுஷ் ஷா இணை 3-2 என்ற செட் கணக்கில் சிங்கப்பூர் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. காலிறுதியில் உலகின் நம்பர் ஒன் இணையான கொரியாவின் ஜாங் வூஜின் மற்றும் லிம் ஜாங்ஹூன் இணையை எதிர்கொள்ளவுள்ளது!
மகளிர் ஸ்குவாஷ்: வெண்கலம் வென்றது இந்தியா!

ஆசியப் போட்டியின் மகளிர் ஸ்குவாஷில் அரையிறுதியில் ஹாங்காங் அணியிடம் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தது இந்திய மகளிர் அணி. ஜோஷ்னா சின்னப்பா, அனாஹத் சிங், தான்வி கண்ணா அடங்கிய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
பேட்மிண்டன் அணி தோல்வி!

ஆசியப் போட்டியின் மகளிர் பேட்மிண்டன் ஆட்டத்தின் காலிறுதியில் தாய்லாந்து அணியிடம் 3-0 என்ற கணக்கில் தோற்று வெளியேறியது இந்திய மகளிர் அணி!
டேபிள் டென்னிஸ்: தமிழக இணை ஏமாற்றம்
ஆசியப்போட்டியின் டேபிள் டென்னிஸில் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமல் - சத்யன் இணை ரவுண்ட் ஆப் 16 சுற்றோடு அதிர்ச்சிகரமாக வெளியேறியிருக்கிறது.
டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் மணிகா பத்ரா

ஆசியப்போட்டியின் பெண்களுக்கான டேபிள் டென்னிஸில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா தாய்லாந்து வீராங்கனை சுதாஷினியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற்றம்.
பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல்: இந்தியாவுக்கு வெள்ளி!

ஆசியப்போட்டியில் துப்பாக்கிச்சுடுதலில் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் திவ்யா, ஈஷா சிங், பாலக் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை வென்றிருக்கிறது.
ஆடவர் இரட்டையர் டென்னிஸ்: இந்தியாவுக்கு வெள்ளி!

ஆசியபோட்டியில் ஆடவருக்கான டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்திய இணை ராம்குமார் ராமநாதன் - சாகேத் வெள்ளி வென்றிருக்கிறது. ராம்குமார் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச் சுடுதலில் மேலும் ஒரு தங்கம்!

ஆசியப்போட்டி துப்பாக்கிச் சுடுதலில் 50 மீ ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங், ஸ்வப்னில், அகில் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி தங்கம் வென்றிருக்கிறது. 1769 புள்ளிகளுடன் உலகச் சாதனையும் படைத்தது.
பெண்கள் தனிநபர் 10 மீ ஏர் பிஸ்டல்: பாலக் தங்கம் வென்றார்

ஆசியப்போட்டியில் பெண்களுக்கான துப்பாக்கிச்சுடுதலில் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை பாலக் தங்கம் வென்றிருக்கிறார். இதே பிரிவில் ஈஷா சிங் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
from Latest news https://ift.tt/ZMKoa8J
0 Comments