https://gumlet.vikatan.com/vikatan/2023-10/f78e6a85-a30d-4563-9fc5-43959427a304/104809592.png?w=280மகாராஷ்டிரா: ரூ.160 கோடி மதிப்பு; 36 மணி நேரத் தேடுதல் வேட்டை - மீண்டும் சிக்கிய திரவ போதைப்பொருள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபகாலமாக அடிக்கடி போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுவருகின்றன. சாம்பாஜி நகரில் ஏற்கெனவே ரூ.250 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தற்போது மீண்டும் அங்கிருக்கும் மருந்து கம்பெனி ஒன்றில் போதைப்பொருள் தயாரிக்கப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறைக்குத் தகவல் கிடைத்தது. உடனே சாம்பாஜி நகர் அருகிலுள்ள பைதன் என்ற இடத்தில் செயல்பட்டுவரும் அபெக்ஸ் மெடிகெம் என்ற நிறுவனத்தில் கடந்த 20-ம் தேதி ரெய்டு நடத்தச் சென்றனர். ஆனால் அன்று கம்பெனி மூடப்பட்டிருந்தது. இதையடுத்து சனிக்கிழமை மீண்டும் ரெய்டு நடத்தினர்.

36 மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனையில் 107 கிலோ திரவ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.160 கோடி. அவற்றைத் தயாரித்த கம்பெனி உரிமையாளர் சௌரப், அவரின் மேலாளர் சேகர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். அவர்கள் இரண்டு பேரும் போதைப்பொருளை வேறு இடத்துக்கு மாற்ற முயன்றனர். ஆனால், அவர்களின் முயற்சி கைகூடவில்லை. மகாராஷ்டிரா முழுவதும் சிறிய மருந்து கம்பெனிகள் குறிப்பிட்ட போதைப்பொருளைத் தயாரித்து விற்பனை செய்துவருவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

சோலாப்பூர் மற்றும் நாசிக்கில் இது போன்ற தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர மும்பை அருகிலும் இது போன்ற தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே நாசிக்கில் 300 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருக்கும் லலித் பாட்டீல், தன்னுடைய கூட்டாளி மூலம் போதைப்பொருளை மறைத்து வைக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.

போதைப்பொருள்

அந்தத் கூட்டாளி போதைப்பொருளை ஆற்றில் தூக்கிப்போட்டுவிட்டதாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து மும்பை சாக்கிநாக்கா போலீஸார் தியோலா என்ற இடத்தில் நீச்சல் வீரர்கள் துணையோடு ஆற்றில் போதைப்பொருளைத் தேடினர். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை. அதேசமயம் அருகில் மலைப்பகுதியில் 12 கிலோ போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/aWMUSck

Post a Comment

0 Comments