https://gumlet.vikatan.com/vikatan/2023-11/a1e73efd-1a4f-4787-873b-97bfea6b3b67/FB_IMG_1700366745377.jpg?w=280`சூரனுக்கு திமுக கொடி வண்ணத்தில் ஆடை?’ - நாகர்கோவில் முருகன் கோயில் சூரசம்ஹார விழா சர்ச்சை

முருகன் கோயில்களில் கடந்த 6 நாள்களாக கந்தசஷ்டி விழா நடந்தது. பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபட்டனர். கந்த சஷ்டி விழாவான நேற்று முருகன் கோயில்களிலும், முருகன் சந்நிதிகள் அமைந்துள்ள கோயில்களிலும் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இந்த விழாவின்போது வாகனத்தில் எழுந்தருளும் முருகன், சூரனை வதம் செய்யும் காட்சி நடைபெறும். கடவுள் முருகனை அலங்காரம் செய்வது போன்று சூரனையும் விதவிதமாக அலங்காரம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள முருகன் சந்நிதியில் கந்த சஷ்டி விழாவின் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. அதில் முருகனால் வதம் செய்யப்பட்ட சூரனுக்கு தி.மு.க கொடியின் வண்ணத்திலான கறுப்பு, சிவப்பு நிறத்தில்  ஆடை அணிவிக்கப்படிருந்தது. அந்த சூரனின் போட்டோவை அ.தி.மு.க ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து "தி.மு.க எனும் சூரன் இன்று வதம் செய்யப்பட்டார்" என பகிர்ந்து வருகின்றனர்.

வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் சூரசம்ஹார விழாவில்

"தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வடிவீஸ்வரம் அழகம்மன் கோயிலில் தி.மு.க கொடியின் வண்ணத்தில் சூரனுக்கு ஆடை அணிவிப்பதா?" என தி.மு.க ஆதரவாளரான கபிலன் உள்ள சிலர் முகநூலில் கேள்வி எழுப்பியதால் இந்த விவகாரம் விவாதபொருளாகி உள்ளது.

இதுகுறித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சரவணன் கூறுகையில், "தி.மு.க ஆன்மிகத்துக்கு எதிரானது இல்லை. தி.மு.க அரசு கோயில் குடமுழுக்குக்காக பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. தி.மு.க-வுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக சிலர் சூரனுக்கு கறுப்பு, சிவப்பு கொடி போன்று அமைத்துள்ளனர். வேண்டுமென்றெ கறுப்பு, சிவப்பு துணியை கட்டி சூரனை வதம் செய்வது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மாவட்ட தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சரவணன்

கறுப்பு, சிவப்பை பயன்படுத்தியவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம். இதுபோன்ற செயல்கள் இனியும் நடக்காமல் இருக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க ஆலமரம் போன்றது அதை அசைக்க முடியாது. பா.ஜ.க-வை சேர்ந்தவர்கள் உள் நோக்கத்தோடு இதை செய்திருக்கலாம் என நினைக்கிறேன்" என்றார்.

சூரனுக்கு கறுப்பு, சிவப்பு ஆடை அணியப்பட்டது குறித்து கோயில் தரப்பில் விசாரித்தோம். "கடந்த 40 ஆண்டுகளாக இதுபோன்றுதான் சூரசம்ஹாரவிழாவில் சூரன் அலங்கரிக்கப்படுவது வழக்கம். அதுவும் பந்தல் அமைக்கும் பணியாளர்கள்தான் சூரனை அலங்காரம் செய்வார்கள். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஆனால், சிலர் வேண்டுமென்றே இதை அரசியல் ஆக்குகின்றனர்" என நிகழ்ச்சியை முன்னின்று நடத்தியவர்கள் தரப்பில் கூறப்பட்டது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/D1lq45o

Post a Comment

0 Comments