https://gumlet.vikatan.com/vikatan/2023-11/fef3d3a1-3550-4353-8fe2-170bc2ea2f92/F_XZzjJbMAAcWvt.jfif?w=280சீனாவில் நடந்த சூதாட்டம்; 3 மணி நேரத்தில் ரூ.3.5 கோடியை இழந்தாரா மகாராஷ்டிரா பாஜக தலைவர்? | பின்னணி

மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த பிறகு பா.ஜ.க தலைவர்களும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தலைவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். தற்போது உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.பி சஞ்சய் ராவத் மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே மீது தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டு பா.ஜ.க தலைவர்களைக் கடும் கோபத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது. சஞ்சய் ராவத் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ''மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே, சீனாவில் நடந்த சூதாட்டத்தில் ரூ.3.5 கோடியைச் செலவு செய்திருக்கிறார்.

சூதாட்டத்தில் பவன்குலே

இது தொடர்பாக என்னிடம் 27 புகைப்படங்கள், ஐந்து வீடியோக்கள் இருக்கின்றன. ஆனால் நான் அதை வெளியிடவில்லை. அதை வெளியிட்டால் பவன்குலேவுக்கும், அவரது கட்சிக்கும் தர்மசங்கடமாகிவிடும். சூதாட்டம் நடக்கும் இடத்தில் பவன்குலே என்ன செய்துகொண்டிருந்தார் என்பதுதான் எனது கேள்வி. ஒரு நாள் இரவில் ரூ.3.5 கோடியைச் செலவுசெய்துவிட்டதாக சிலர் என்னிடம் சொன்னார்கள். சூதாட்டம் விளையாடவில்லையென்றால் அங்கு என்ன செய்து கொண்டிருந்தார்?

அவர் மூன்று மணி நேரம் சூதாட்டம் விளையாடி ரூ.3.5 கோடியை இழந்திருக்கிறார். அதற்கான பணத்தை அமெரிக்க டாலரில் கொடுத்திருக்கிறார். ஆனால் பா.ஜ.க இதை மறைக்கப் பார்க்கிறது. மகாராஷ்டிராவில் பல்வேறு பிரச்னைகளால் மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் பவன்குலே சூதாட்டத்தில் பொழுதைக் கழிக்கிறார்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சஞ்சய் ராவத்

இதற்கு பா.ஜ.க தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் செய்தியில், ''எங்களது மாநிலக் கட்சித் தலைவர் எப்போதும் சூதாட்டத்தில் பங்கேற்றது கிடையாது. அங்கு அவர் குடும்பத்தோடு சென்றிருந்தார்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், `ஆதித்ய தாக்கரே கையில் இருப்பது என்ன பிராண்ட் விஸ்கி?’ என்று கேள்வி எழுப்பியதோடு, இது தொடர்பாக ஒரு புகைப்படத்தையும் அந்தக் கட்சி வெளியிட்டிருக்கிறது. மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் இது தொடர்பாக அளித்த பேட்டியில், ''பவன்குலே தனது குடும்பத்தோடு ரெஸ்டாரன்ட்டுக்கு சாப்பிடச் சென்றிருக்கிறார். அங்கு சூதாட்டமும் நடந்திருக்கிறது'' என்று விளக்கமளித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news https://ift.tt/by9oBFX

Post a Comment

0 Comments