https://gumlet.vikatan.com/vikatan/2023-12/989f0154-aee4-48cc-8974-d8bc8a37ac09/Untitled_7.jpg?w=280மார்கழித் திருவாதிரை: ஆருத்ரா தரிசனம் இன்றா, நாளையா?

27 நட்சத்திரங்களில் திருவாதிரை நட்சத்திரத்தின் தேவதையாக சிவபெருமானைக் குறிப்பிடுகின்றன ஆகமங்கள். ஆகவே, திருவாதிரை நட்சத்திர நாளில் எவர் சிவபெருமானை வணங்குகிறாரோ, அவர் சகலவிதமான நலன்களையும் பெறுவார் என்பது ஐதிகம்.

ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபடுவது விசேஷம். அவ்வாறு விரதம் கடைப்பிடிக்க முடியாதவர்கள், மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரதன்றாவது விரதம் இருக்க வேண்டும். காரணம் மார்கழி மாதத்தின் திருவாதிரை மகிமை பொறுந்திய நாள். நடராஜப்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும் நாள்.

சிதம்பரம் நடராஜர் கோயில்

சிவபெருமானின் திருக்கோலங்களில் சிறப்புமிக்கது நடராஜர் திருவடிவம். ஐந்தொழில்களையும் ஒருங்கே புரிந்து பிரபஞ்சத்தை இயக்கும் நடராஜப்பெருமானுக்கு ஆண்டில் ஆறு தினங்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அதில் மார்கழித் திருவாதிரை அபிஷேகம் விசேஷமானது. இதை ஆருத்ரா அபிஷேகம் என்று சிறப்பித்துச் சொல்வார்கள்.

அப்படிப்பட்ட மார்கழித் திருவாதிரை நட்சத்திரம் நாளை (27.12.23) வருகிறது. பொதுவாக மார்கழித் திருவாதிரை இரண்டு முக்கியத்துவம் கொண்டது. ஒன்று ஆருத்ரா அபிஷேகம். மற்றொன்று ஆருத்ரா தரிசனம். பொதுவாக இந்த அபிஷேக தரிசனம் மிகவும் விசேஷமானது. இந்த அபிஷேகம் நாளை நடைபெறும் என்று சில நாள்காட்டியில் குறிப்பிடப்பட்டிருப்பதால் ஆருத்ரா தரிசனம் எப்போது? நாம் விரதமும் வழிபாடும் கடைப்பிடிக்க வேண்டியது எப்போது என்கிற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.

பௌர்ணமி திதி இருப்பதால் இன்று இரவே சில ஆலயங்களில் ஆருத்ரா அபிஷேகம் செய்ய இருக்கிறார்கள். ஆனால் சிதம்பரம் முதலான முக்கியமான சிவத்தலங்களில் நாளை அதிகாலையில் ஆருத்ரா அபிஷேகம் நடைபெற இருக்கிறது.

திருவாதிரை நட்சத்திரம் 26-ம் தேதி நள்ளிரவு 10.57 மணிக்குத் தொடங்கி 27-ம் தேதி நள்ளிரவு 12.06 மணிவரை உள்ளது. எனவே சிதம்பரத்தில் நாளை அதிகாலை 3 மணிக்குத் தொடங்கும் ஆருத்ரா அபிஷேகம் மறுநாள் காலை 11 மணி வரை நடைபெறும். அதன்பின் அலங்காரம் நடைபெற்று நண்பகல் 12 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நிகழும்.

நடராஜர்

எனவே நாமும் நம் வீட்டில் 27-ம் தேதி அன்றே திருவாதிரையைக் கொண்டாடலாம். பொதுவாக மார்கழித் திருவாதிரை நாள் அன்று களியும் கதம்ப சாம்பாரும் செய்து இறைவனுக்குப் படைப்பது வழக்கம். அதை நாம் செய்து நிவேதனம் செய்ய வேண்டியதும் 27-ம் தேதி அன்றுதான்.



from Vikatan Latest news https://ift.tt/f5tzLPI

Post a Comment

0 Comments