https://gumlet.vikatan.com/vikatan/2023-12/6e8fa5de-6754-4a0b-b038-463f694e77bd/Capture.JPG?w=280எண்ணூர்: அமோனியா வாயு கசிவு... மூச்சு திணறல், மயக்கம் - கிராமத்தை விட்டு வெளியேறிய மக்கள்!

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தினால் எண்ணூர் பகுதியில் எண்ணெய்க் கழிவுகள் வெள்ளத்தில் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயம் உத்தரவின் பெயரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கழிவுகள் அகற்றப்பட்டன. இந்நிலையில் சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது

சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோரமண்டல் இண்டர்நேசனல் லிமிடெட் எனும் நிறுவனத்துக்கு கடற்கரையில் இருந்து 2 முதல் 3 கி.மீ. தொலைவில் கப்பல்களிலிருந்து திரவ அம்மோனியா கடலுக்கடியில் பதிக்கப்பட்ட குழாய் மூலமாக வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இரவில் இந்த குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமக சின்ன குப்பம், பெரியகுப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய பகுதிகளில் கடும் நெடியுடன் கூடிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு இந்த வாயு கசிவால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத் திணறுலுடன் மயக்கமும் ஏற்பட்டிருக்கிறது. வாயுகசிவால் அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. நள்ளிரவில் திடீரென இருமல், மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பெரிய குப்பம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி ஆட்டோ, மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் வேறு இடங்களுக்கு வெளியேறினர். 30-க்கும் மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் மூச்சு திணறல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மக்கள், தூரப் பகுதியில் உள்ள தேவாலயங்கள், சமூக நலக் கூடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Vikatan Latest news https://ift.tt/DJ1RSkY

Post a Comment

0 Comments